மீன் கடைகளால் மக்கள் அவதி உப்பளம் - பழைய துறைமுகம் சாலையில் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், மாணவர்கள், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் அவதியடைகின்றனர்.
சிவக்குமார், தவளகுப்பம். மேம்பாலம் சேதம் உறுவையாறு மேம்பாலத்தில் இரும்பு கம்பிகள் பெயர்ந்து வெளியே தெரிவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஜினிமுருகன், வில்லியனுார். சாலையில் மணல் புழுதி கடலுார் சாலை, அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையில் இரு புறங்களிலும் மண் குவியலாக இருப்பதால் புழுதி ஏற்பட்டு வருகிறது.
பாரதி, அரியாங்குப்பம். காலி மனையில் புதர்கள் உருளையன்பேட்டை, கோவிந்த சாலை, முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் காலி மனையில் புதர்கள் மண்டி கிடக்கிறது.
முருகன், உருளையன்பேட்டை. டவுன் பஸ் தேவை தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கவிதா, தேங்காய்திட்டு.

