ADDED : ஜன 10, 2026 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் விளக்கு எரியுமா?
அரும்பார்த்தபுரம், புறவழிச்சாலையில், பல இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. ராஜ்குமார், புதுச்சேரி.
போக்குவரத்து இடையூறு
புதுச்சேரி நுாறடி சாலை, காமாட்சி ஓட்டலில் இருந்து இந்திரா காந்தி, சதுக்கம் வரை சாலையோரங்களில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பாஸ்கர், புதுச்சேரி.
சிமென்ட் சிலாப் சேதம்
ராஜிவ் சதுக்கம், வழுதாவூர் சாலையில், சிமென்ட் சிலாப் உடைந்து ஆபத்து ஏற்படுத்தும் நிலையில், உள்ளது.
குமார், புதுச்சேரி.
பயணியர் நிழற்குடை தேவை
மரப்பாலத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கஸ்துாரி, மரப்பாலம்.

