/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மஞ்சள் சாகுபடியில் ரூ.1.29 லட்சம் லாபம் கிடைத்தது!
/
மஞ்சள் சாகுபடியில் ரூ.1.29 லட்சம் லாபம் கிடைத்தது!
மஞ்சள் சாகுபடியில் ரூ.1.29 லட்சம் லாபம் கிடைத்தது!
மஞ்சள் சாகுபடியில் ரூ.1.29 லட்சம் லாபம் கிடைத்தது!
PUBLISHED ON : மே 01, 2024 12:00 AM

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள கள்ளம்புளி கிராமத்தில் மஞ்சள்சாகுபடி செய்து வரும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்துள்ள முத்துமாரி:
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டிய காலத்தில், இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறேன். இந்தப் பகுதியில் நெல், வாழை, காய்கறிகள், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.
எனக்கு சின்ன வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் அதிகம். சின்ன வயதில், விடுமுறை நாட்களில் எங்க தோட்டத்தில் தான் இருப்பேன்.
களை எடுக்குறது, அறுவடை செய்து, காய்கறிகளை சாக்கு மூட்டையில் போட்டு கட்டுறதுன்னு அப்பாவுக்கு ஒத்தாசையாக விவசாய வேலைகள் செய்வேன்.
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளோட சாகுபடி அனுபவங்களை அப்பாகிட்ட சொன்னேன். இயற்கை விவசாயம் செய்ய ஒத்துக்கிட்டார்.
பல தானிய விதைப்பு மூலம் மண்ணை வளப்படுத்தினோம். இயற்கை இடுபொருளை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்தோம்.
முதல் முறை மகசூல் சுமார் தான். அடுத்தடுத்த சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்தது. இந்த நிலையில் தான் திருமணமாகி என் கணவர் வீட்டுக்கு வந்தேன்.
கணவர், மாமனார், மாமியாரிடம் எடுத்து சொல்லி, அவங்களையும் இயற்கை விவசாயத்துக்கு மாத்தினேன்.
மொத்தம் 6 ஏக்கர் நிலம் இருக்கு. 3 ஏக்கரில் தென்னை, 2 ஏக்கரில் நெல், தலா, 50 சென்டில் மஞ்சளும், செண்டிப்பூவும் சாகுபடி செய்றோம்.
மலர், மஞ்சள் சாகுபடியை நான் கவனிச்சுக்கிறேன். மஞ்சள் சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் இயற்கை முறையில் தான் செய்றாங்க.
எங்கள் பகுதியில் செம்மண் நிலங்கள் அதிகம். இந்த மண்ணில் விளையக்கூடிய மஞ்சள் கிழங்கு நல்லா செழிப்பாகவும், ஊக்கமாகவும் இருக்கும்.
பொங்கல் சமயத்தில் இங்க அறுவடை செய்யப்படுற மஞ்சள் கொத்துகள், தென்காசி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உட்பட இன்னும் பல மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டும் இதே, 50 சென்ட் பரப்பளவில் தான் மஞ்சள் சாகுபடி செய்தேன். 8,500 குலைகள் மகசூல் கிடைத்தது. அதில், வளர்ச்சியில்லாத குலைகள், சேதாரமான குலைகள் போக, 8,000 குலைகள் நல்லா தரமானதாக விற்பனை செய்ய முடிந்தது.
ஒரு குலை, 20 ரூபாய்னு பேசி ஒரே வியாபாரிகிட்ட விற்பனை செய்தேன். அந்த வகையில், 1.60 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைத்தது. இதில், 31,000 ரூபாய் வரை செலவு போக, 1.29 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது.
தொடர்புக்கு:
80982 65773