sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!

/

விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!

விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!

விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!


PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வனத் துறையில், 33 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்திருக்கும் முதல் மாநிலமாக குஜராத் விளங்குகிறது. கடந்த 2008ல் குஜராத் வனத்துறையில், முதல் பெண் வனக்காப்பாளராக பணியில் சேர்ந்துள்ள ரஸீலா பென் வாதர்:

கிர் காடுகளில் இருக்கும் வனவிலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். சிங்கம் மீட்புப் பணியில் சேர்ந்த முதல் பெண் வனக்காப்பாளரும் நான் தான்.

என் உயிரை பணயம் வைத்து, 1,100க்கும் மேற்பட்ட மீட்புப் பணிகளின் வாயிலாக பல சிங்கங்கள், சிறுத்தைகள், முதலைகள், மலைப்பாம்புகள் மற்றும் பல விலங்குகளை காப்பாற்றி உள்ளேன்.

வனவிலங்கு மீட்பு தொடர்பாக, பிற மாநிலங்களில் இருந்து வரும் வனத்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும் தருகிறேன். எனக்கு உறுதுணையாக இரு பெண் வனத்துறை அலுவலர்களும் இருக்கின்றனர்.

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் சமயங்களில் அதை போக்க, அந்த இடத்துக்கு நாங்கள் விரைவோம். உதாரணமாக, வனவிலங்கு ஒன்று காட்டை விட்டு நீங்கி, மனிதர்கள் வசிக்கும் இடத்திற்குள் புகுந்தாலோ அல்லது கிணறு மாதிரியான நீர்நிலைகளில் விழுந்து விட்டாலோ, உடனடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட விலங்கை மீட்டு, அதன் இயற்கை வாழிடத்தில் பாதுகாப்பாக விட்டு விடுவோம்.

காயம்பட்ட விலங்குகளை மீட்பதுடன், ஆதரவற்று வனத்தில் திரியும் இளம் விலங்குகளை காப்பாற்றி, வளர்த்து ஆளாக்கி, வனத்துக்குள் விட்டு விடுவேன். அதுமட்டுமல்லாது, வேட்டை தடுப்பு செயல்பாடுகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறேன்.

வீட்டினரின் எதிர்ப்பை மீறி தான், இந்த பணியை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் நான் எதிர்பார்த்த அளவுக்கு, வனத்துறையிலும் ஆதரவு இல்லை. நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் போல் பணி செய்தாக வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.

அதற்காகவே, கடுமையாக உழைத்தேன். களத்தில் இறங்கி வேலை செய்யும் போது, ஆணுக்கு சளைத்தவள் நானில்லை என்பதை நிரூபித்தேன்.

ஆண்கள் மட்டுமே செய்து வந்த வேலைகளை, ஒரு பெண்ணாலும் செய்ய முடியும் என்பதை, என் துறையை சேர்ந்த அதிகாரிகள் இப்போது ஒப்புக் கொள்கின்றனர்.

கடந்த குடியரசு தினத்தன்று, புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு என்னை அழைத்த ஜனாதிபதி, கிர் பகுதியின் அடர் வனங்களில் சிங்க குட்டிகளை வெற்றிகரமாக மீட்டதற்காக, குஜராத்தில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருதான, 'கவுரவ் வன்டா குஜராத்தி' விருதை வழங்கி கவுரவித்தார்.






      Dinamalar
      Follow us