sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

புண்ணியம் செய்தால் கடவுள் நம்மை காப்பாற்றுவார்!

/

புண்ணியம் செய்தால் கடவுள் நம்மை காப்பாற்றுவார்!

புண்ணியம் செய்தால் கடவுள் நம்மை காப்பாற்றுவார்!

புண்ணியம் செய்தால் கடவுள் நம்மை காப்பாற்றுவார்!


PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இசை பயணத்தில், 60வது ஆண்டை தொட இருக்கும், மூத்த வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமரி: என் 9 வயதில் வயலின் கற்றுக்கொள்ள துவங்கிய இசைப் பயணத்தில், 60ம் ஆண்டு மைல் கல்லை அடுத்த ஆண்டில் தொடவிருக்கிறேன்.

என் தாத்தாவும், பாட்டியும் கன்னியாகுமரிக்கு சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது நான் பிறந்ததால், அந்த தேவியின் பெயரையே எனக்கு வைத்தனர்.

நான் பிறந்தது ஆந்திராவின் குண்டூர்; வளர்ந்தது விஜயநகரம். என் சிறுவயதில் விஜயநகரத்தில் நாங்கள் வசித்தபோது, 'இவதுாரி விஜயேஸ்வர ராவ்' என்ற மூத்த வித்வானிடம், என் அக்கா வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.

அவர் ஒரு வயலின் வித்வானும் கூட. அப்போது நானும், அக்காவுடன் பாட்டு கிளாஸுக்கு போவேன். அங்கே, அக்காவுக்கு கற்றுக் கொடுத்ததை நானும் கற்று பாடுவேன்.

அந்த குருவுக்கு பார்வை கிடையாது. ஒருநாள் திடீரென்று எனக்கு வயலின் சொல்லிக் கொடுக்கிறேன் என்றார். அப்போது எனக்கு 9 வயதிருக்கும். அவரிடம் வயலின் கற்றுக்கொள்ள துவங்கினேன். விஜயநகரத்தில் தான் அரங்கேற்றம் நடந்தது.

அதன்பின், சிறு சிறு கச்சேரிகள் செய்யத் துவங்கினேன். வயலினால் ஈர்க்கப்பட்டேன் என்பதை விட, வயலின் என்னை ஈர்த்துக் கொண்டது என்றால் சரியாக இருக்கும். அதன்பின், பிரபல வயலின் கலைஞர் சந்திரசேகரன், எம்.எல்.வி., இருவரும் குருவாக அமைந்தது நான் செய்த பாக்கியம்.

நான் சென்னைக்கு வந்ததும், எம்.எல்.வி., அம்மாவை சந்தித்ததும் தான், என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. 1971-ல் அவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடைய கச்சேரிகளுக்கு வாசிக்கத் துவங்கினேன். அவர், என்னை தன் சொந்த மகள் போல கவனித்துக் கொண்டார்.

என் சிஷ்யர்களிடம், அவர்கள் வசதியானவர்களாக இருந்தாலும் சரி, வசதியற்றவர்களாக இருந்தாலும் சரி, தட்சணை வாங்கிக் கொள்வதில்லை. கச்சேரிகள் வாயிலாக கிடைக்கும் பணமே போதும். 'நாம் ஒரு புண்ணியம் செய்தால், கடவுள் நம்மை காப்பாற்றுவார்' என, நம்புகிறவள் நான்.

அவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் வகுப்புக்கு வரவில்லை என்றாலோ, அவர்கள் எனக்கு போன் செய்து தகவல் சொல்லவில்லை என்றாலோ, 'ஈகோ' பார்க்காமல், நானே அவர்களுக்கு போன் செய்து, விசாரிப்பேன். 'நேரத்தை வீணாக்கக் கூடாது' என்பதே என் சிஷ்யர்களுக்கு நான் சொல்லும் முக்கியமான, 'அட்வைஸ்!'

இந்திய அரசு, பத்மஸ்ரீ கொடுத்திருக்கின்றனர். தேசிய முக்கியத்துவம் பெற்ற சங்கீத நாடக அகாடமி விருது கொடுத்திருக்கின்றனர்.

காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், அஹோபில மடம், மந்த்ராலயம், தத்த பீடம் உள்ளிட்டவை என் இசைப்பணி தெய்வீகமானது என்று சொல்லி, அவர்களுடைய ஆஸ்தான வித்வானாக அறிவித்து கவுரவித்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us