/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தொழில் துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கு!
/
தொழில் துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கு!
PUBLISHED ON : மே 13, 2024 12:00 AM

வேளாண் உணவு பொருட்கள் தயாரிப்பில் சாதித்து வரும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தொழில் முனைவரான சந்தியா:
நான் பிறந்தது, படித்தது எல்லாம் திருச்சி. இங்க பி.காம்., முடிச்சிட்டு, சென்னையில் எம்.காம்., முடிச்சேன். கணவர், குழந்தைகள் என, வாழ்க்கை வழக்கமான ரூட்டில் போயிட்டிருந்தது.
தொழில் முனைவோர் பற்றிய கட்டுரைகளை படிக்கும்போது, நாமளும் ஏதாச்சும் தொழில் செய்யணும் என்ற ஆர்வம் ஏற்பட்டுட்டே இருக்கும்.
என்ன பண்ணலாம்னு யோசிச்சு, என்னை போலவே பிசினசில் விருப்பமாக இருந்த, மும்பையில் வசிக்கிற, இப்போது என்னோட பிசினஸ் பார்ட்னரான மீனா கணேசனிடம் பேசினேன். இரண்டு பேரும் உணவு சம்பந்தப்பட்ட தொழிலை டிக் பண்ணினோம்.
பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், மூலிகைகளை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்க முடிவு செஞ்சோம்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாரம்பரிய உணவுகள் மீது விருப்பம் இருந்தாலும், அவற்றை செய்ய நேரமாகும் என்பதும், இளைய தலைமுறையினருக்கு அவற்றை எப்படி தயார் செய்வது என தெரியாமல் இருக்கிறதும், அவங்க பாரம்பரிய உணவுகளை நாட தடையாக இருக்கு என தெரிஞ்சுக்கிட்டோம்.
அதற்கு தீர்வு தரும் வகையில், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை எளிதாக சமைக்கும் வண்ணம், மதிப்பு கூட்டிய உணவுப் பொருட்களாக தயாரிக்க திட்டமிட்டோம்.
கடந்த 2022-ல் பிசினசை துவங்கியபோது, முதலில் சின்ன அளவில் சிறுதானியங்களிலும், பாரம்பரிய அரிசியிலும் ஸ்நாக்ஸ் மற்றும் சிற்றுண்டிக்கான, 'ரெடி மிக்ஸ்'களை தயார் செய்தோம். அதையெல்லாம் தெரிஞ்சவங்ககிட்ட கொடுத்து, நல்ல ரிசல்ட் கிடைச்சதும் எல்லா கடைகளுக்கும் கொடுக்கத் துவங்கினோம்.
குதிரைவாலி, தினை, சாமை, வரகு, நவ தானியங்களில் நுாடுல்ஸ், தினை, சாமை, நவ தானியங்களில் சேவை, கருப்புக் கவுனி, மாப்பிள்ளை சம்பாவில் புட்டு மாவு, முடக்கத்தான், முருங்கை, துாதுவளை, வல்லாரை, பிரண்டை ஆகியவற்றில் இட்லி பொடி, நாவல், நெல்லிச்சாறு, கோக்கனட் பைட்ஸ்.
மூலிகை சூப் மிக்ஸ்கள், சிறுதானிய லட்டுகள், மில்லட்சில் ஸ்நாக்ஸ் என, இப்போது, 45 வெரைட்டிகள் தயாரிக்கிறோம். 'ரெடி டு குக்' மாடல் தான் எங்களோட வெற்றி. எங்ககிட்ட இப்போது, 10 பேர் நேரடியாக வேலை பார்க்கின்றனர். மாசத்துக்கு, 6.50 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் ஆகிறது.
துவக்கத்தில், திருச்சியில் மட்டும் மார்க்கெட்டிங் பண்ணிட்டிருந்தோம். இப்ப, இந்தியா முழுக்கவும் அனுப்புறோம். ஜெர்மனி, கனடா என, வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறோம்.
தொழில் துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கு. ஆர்வம், தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி இருக்கிறவங்க வாங்க.
தொடர்புக்கு:
99621 99321