sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

200 பதார்த்தங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம்!

/

200 பதார்த்தங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம்!

200 பதார்த்தங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம்!

200 பதார்த்தங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம்!


PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரத்தில், உணவகம் மற்றும் பேக்கரி தொழிலில் கலக்கும் வெங்கடசுப்பு: என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலக்கரைப்பட்டி. 1997ல் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே, பங்குதாரர்கள் சிலருடன் சேர்ந்து, ஐஸ்வர்யா என்ற பெயரில் சைவ உணவகத்தை துவக்கினேன்.

சேலத்தில் எங்கள் உறவினர் ஒருவர் நடத்திய பேக்கரியில் பணியாற்றிய அனுபவத்துடனும், அவருடைய வழிகாட்டுதலுடனும் ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றையும் ஆரம்பித்தோம்.

ராமநாதபுரத்தில் ஏற்கனவே சிலர் பேக்கரி நடத்தி வந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திர அடுப்புகளைக் கொண்டு முதன் முதலாக கேக் வகைகளை தயாரித்தோம்.

பேக்கரி தொழிலில் இருந்து உணவகங்களை வேறுபடுத்திக் காட்டு வதற்காக, 'பீமாஸ்' என்ற பிராண்டுடன் கூடிய ஹோட்டல் ஒன்றை 2016ல் துவக்கினோம். 2020ல் பீம விலாஸ் ஹோட்டலை துவங்கினோம்.

ராமநாதபுரத்தில் தரமான ஸ்டார் ஹோட்டல் ஏதும் இல்லாத நிலையில், 'பீமாஸ் நளபாகம்' என்ற பெயரில் உணவகம் ஒன்றை ஏற்படுத்தினோம். இந்த உணவகத்துடன் வைஸ்ராய் என்ற பெயரில், கூட்ட அரங்கத்துடன் கூடிய தங்கும் விடுதியையும் அமைத்துள்ளோம்.

நாங்கள் விற்பனை செய்யும் இனிப்பு, காரம், பேக்கரி ஐயிட்டங்கள், உணவு வகைகள் என எதை எடுத்துக் கொண்டாலும், அதற்கென தனிச்சிறப்பு இருக்க வேண்டும் என்பதை பிரதானமாகக் கொண்டுள்ளோம்.

தென்மாநில உணவுகளுடன், வடமாநில உணவுகள், சைனீஸ் உணவுகளையும் சிறப்பாக தயாரித்துக் கொடுக்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் உணவுகளை, வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையிலும், உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலை பின்பற்றியும் தயாரித்துக் கொடுக்கிறோம்.

இவை தவிர, முகூர்த்த நிகழ்வுகள், விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு தேவையான உணவுகளை தயாரித்து, நேரடியாகச் சென்று வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

இதன் வாயிலாக, வாடிக்கையாளர்களுடன் வியாபாரம் என்ற நோக்கத்தைத் தாண்டி, நெருங்கிய உறவினர்கள் போன்ற பந்தத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

நாங்கள், 28 வகையான இனிப்புகள், 24 வகையான காரங்கள் மற்றும் 20 வகையான பிஸ்கட், குக்கீஸ் உள்ளிட்ட 200 வகையான பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். 25 பணியாளர்களுடன் துவங்கப்பட்டது எங்கள் நிறுவனம். தற்போது உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us