sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/சொல்கிறார்கள்/ சிறுதானிய பிஸ்கட்டில் நிறைவான லாபம்!

 சிறுதானிய பிஸ்கட்டில் நிறைவான லாபம்!

 சிறுதானிய பிஸ்கட்டில் நிறைவான லாபம்!


PUBLISHED ON : பிப் 19, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2026 05:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆதித்யா அக்ரோ புட்ஸ்' என்ற பெயரில், சிறுதானிய பிஸ்கட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும், சென்னை , செங்குன்றத்தை சேர்ந்த , 50 வயதான ராஜா யாதவ்: எ ங்களது பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் என்றாலும், தொழில் நிமித்தமாக, அப்பா சென்னையில் குடியேறி விட்டார். அதனால், நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னை தான்.

படித்து முடித்ததும், மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தேன். அதன்பின், உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில், மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்களை விற்பனை செய்யலாம் என்று தோன்றியது.

என்னிடம் சிறுதானியங்கள் சாகுபடி செய்வதற்கான சூழல் இல்லை. ஆனால், சிறுதானிய மதிப்புக்கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்று தோன்றியது.

அதனால், தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப துறையிலும், சென்னை, கிண்டியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை வாயிலாகவும், சிறுதானிய பிஸ்கட்கள் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்றேன்.

என்னிடம் இயந்திரங்கள் இல்லாததால், பேக்கரி ஒன்றில் மூலப்பொருட்களை கொடுத்து பிஸ்கட்டுகளை தயாரித்தேன்; விற்பனை சூடுபிடிக்க துவங்கிய நேரத்தில், பேக்கரியில் பிஸ்கட் தயாரிப்புக்கான தொகையை உயர்த்தி விட்டனர்.

அதனால், 2013ல் சிறுதானிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினேன். தற்போது, எங்களிடம், 110 வகையான பிஸ்கட் வகைகள் உள்ளன. நாங்கள் மைதா பயன்படுத்துவதில்லை. கோதுமை மாவுடன், சிறுதானி யத்தில் ஏதாவது ஒரு வகையை சேர்க்கிறோம்.

மின் கட்டணத்தை குறைக்கும் வகையில், பிஸ்கட் தயாரிக்கும் இயந்திரத்தை டீசலில் தான் இயக்குகிறோம். உணவு தர சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் வாங்கி, 'தேசி மில்லட்' என்ற பெயரில் விற்பனை செய்கிறேன்.

என் சிறுதானிய பிஸ்கட்களை, வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடு களுக்கும் அனுப்பி வருகிறேன்.

ஆண்டுக்கு, 250 டன் பிஸ்கட்கள் விற்பனை செய்து வருகிறேன். இதன் வாயிலாக, 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. அனைத்து செலவுகளும் போக, ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

பிரபல பிஸ்கட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு, இந்த தொழிலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல. தரமாகவும், சுவையாகவும், ஈர்க்கும்படி யான பேக்கிங்கும் இருந்தால் தான் மக்கள் வாங்குவர்.

இதை சரியாக செய்வதால் தான், இந்த தொழிலில் என்னால் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, நிறைவான லாபம் ஈட்ட முடிகிறது.

தொடர்புக்கு

72000 11939

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us