/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உடல்வாகுக்கும் 'வெஸ்டர்ன் டான்ஸ்' ஆடுறதுக்கும் சம்பந்தமில்லை!
/
உடல்வாகுக்கும் 'வெஸ்டர்ன் டான்ஸ்' ஆடுறதுக்கும் சம்பந்தமில்லை!
உடல்வாகுக்கும் 'வெஸ்டர்ன் டான்ஸ்' ஆடுறதுக்கும் சம்பந்தமில்லை!
உடல்வாகுக்கும் 'வெஸ்டர்ன் டான்ஸ்' ஆடுறதுக்கும் சம்பந்தமில்லை!
PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

வெள்ளி விழாவில் அடிஎடுத்து வைத்திருக்கும், 'அகாடமி ஆப் மாடர்ன் டான்ஸ்' என்ற பெயரில், சென்னையில் நடன பள்ளி நடத்தி வரும், நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகன் கவுதம், மருமகள் கோகிலா:
கவுதம்: டான்ஸ் தான் எங்களை இணைத்தது. துவக்கத்தில் இரண்டு பேரும் நண்பர்களாக தான் இருந்தோம். நாங்க சேர்ந்து சுத்துறதெல்லாம் எங்க அப்பாவுக்கு பிடிக்கலை. எங்கம்மா தான், 'அவனுக்கு யாரைப் பிடிச்சிருக்கோ அவளையே கல்யாணம் பண்ணிக்கட்டும்'னு சொல்லி அப்பாவை சம்மதிக்க வைத்தாங்க.
கோகிலா: மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவிற்கு இடையில் உள்ள, புருனே நாட்டில் தான் பிறந்து வளர்ந்தேன். வேற நாடு, வேற மொழி, கலாசாரம், பழக்க வழக்கங்கள், லைப் ஸ்டைல்னு எங்களுக்குள்ள நிறைய வேறுபாடுகள்.
'இத்தனை வேறுபாடுகளுக்கு மத்தியில் உன்னால் இந்தியாவிற்கு சென்று, 'அட்ஜஸ்ட்' பண்ணிட்டு வாழ முடியுமா?'னு அம்மா கேட்டாங்க. 'நேசிக்கிறவங்களுக்காக சில தியாகங்களை பண்றதுல தப்பில்லைம்மா'னு சொன்னேன்.
நான் சிங்கப்பூரில் டான்ஸில் மாஸ்டர்ஸ் டிகிரி படிக்க கிளம்பினேன். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நாங்க பிரிஞ்சிருக்க வேண்டிய நிலைமை. அப்ப, எங்கப்பா ஒரு அறிவுரை சொல்லி அனுப்பினார்...
'நீ வெளிநாட்டுக்குப் போறே... உனக்கு அங்கே யாரையாவது பிடிக்கலாம். அதே மாதிரி நீ இல்லாத நாட்களில் கவுதமுக்கும் வேற பொண்ணைப் பிடிக்கலாம்.
அப்படி இரண்டு பேருக்கும் வேற வேற ஆட்களைப் பிடிச்சா, அவங்ககூட வாழ அனுமதிச்சு, நீங்க பிரெண்ட்சா விலகிடுங்க. இந்தப் பிரிவு தான் உங்க ரிலேஷன்ஷிப் எவ்ளோ ஸ்ட்ராங்னு தீர்மானிக்கப் போகுது'ன்னு சொன்னார்.
சிங்கப்பூரில் இருந்த போது திடீர்னு ஒரு போன், 'கல்யாண தேதி நிச்சயம் பண்ணிருக்கோம். என் பையனை கல்யாணம் பண்ணணும்னா உடனே கிளம்பி வா'ன்னு கணீர் குரலில் பேசினார் என் மாமனார். அடிச்சுப் பிடிச்சு இரண்டு மாச பிரேக் எடுத்துட்டு வந்தேன்.
நானும், கவுதமும் சேர்ந்து செய்த ஒரு மெகா டான்ஸ் பெர்பாமன்சை முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்துட்டு, மனசார பாராட்டினதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
கடந்த 1998 ஜனவரியில் வெறும் நாலே பேரோட, 'அகாடமி ஆப் மாடர்ன் டான்ஸ்' பள்ளியை துவங்கினேன். வெஸ்டர்ன் டான்ஸ் என்றாலே, மேல் தட்டு மக்களுக்கானதுன்னு இங்கே ஒரு தவறான அபிப்ராயம் பலருக்கும் இருக்கு.
அது ரொம்ப தவறு. அதே மாதிரி பாலே, சல்சா டான்ஸ் ஆடறதுக்கு ஒல்லியா இருக்கணும்னு பலர் நினைக்கிறாங்க.
உடல்வாகுக்கும், வெஸ்டர்ன் டான்ஸ் ஆடறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் இதை கற்றுக் கொள்ளலாம்.

