தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/கவர்னருக்கு கேக் ஊட்டியது மறக்க முடியாது!

கவர்னருக்கு கேக் ஊட்டியது மறக்க முடியாது!

கவர்னருக்கு கேக் ஊட்டியது மறக்க முடியாது!


PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கே'ஸ் கிச்சன் என்ற பெயரில், 'பேக்கிங்' பிஸ்னஸ் செய்யும் சென்னையைச் சேர்ந்த, 15 வயது சிறுமி கேஷிகா மனோகர்:

கொரோனா, 'லாக் டவுன்' சமயத்தில் தான், சமையலில் ஆர்வம் வந்தது. 'வாயாடி சமையல்'னு ஒரு யு டியூப் சேனலை துவங்கி, என் சமையல் வீடியோக்களை பதிவிட துவங்கினேன். என் பிரண்டோட அம்மாவைப் பார்த்து, 'பேக்கிங்' பண்றதுல ஆசை வந்தது.

துவக்கத்தில் என்கிட்ட ஓவன் இல்லை; குக்கரில் கேக் செய்றேன் என்ற பேரில், கிலோ கணக்கில் பொருட்களை வீணாக்கி இருக்கிறேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து என், 12வது பிறந்த நாளுக்கு வீட்டில் எனக்கு ஒரு ஓவனை பரிசளித்தனர். அதில் முதன் முதலாக பிரவுனி கேக் செய்தேன்; எல்லாருக்கும் பிடித்திருந்தது.

என் அக்கா தான், 'சூப்பரா பண்றே... இதையே ஒரு பிராண்டா துவங்கி பிஸ்னசா பண்ணு'ன்னு என்கரேஜ் பண்ணாங்க. அப்படித் தான், 'கே'ஸ் கிச்சன் துவங்கியது.

விளையாட்டாக துவங்கிய விஷயம் பிஸ்னசாக மாறிய கதை இது தான். படிப்பில் நான் ஆவரேஜ் தான். எக்ஸாம் டைமில் என்னால பேக்கிங் பிஸ்னசில் கவனம் செலுத்த முடியவில்லை; அதே சமயம் அதைப் பண்ணாம இருக்கவும் முடியவில்லை.

அப்ப தான் எனக்கு ஓப்பன் ஸ்கூல் கான்செப்ட் பத்தி தெரிந்தது. அதன் வாயிலாக, 14 வயதிலேயே 10ம் வகுப்பிற்கான தேர்வு எழுதினேன். இப்போது ஓப்பன் ஸ்கூல் முறையிலேயே பிளஸ் 1ம் படிக்கிறேன்.

பேக்கிங்கில் மாஸ்டர் கிளாஸ் முடிச்சிட்டேன். ஆன்லைனில் பேக்கிங் வகுப்புகள் எடுக்குறேன்; அதில் கவர்னரை சந்தித்த அனுபவம் மறக்க முடியாததாக இருக்கிறது.

நான் உட்பட சிறு வயதிலேயே சாதித்தோரை பற்றி பத்திரிகை ஒன்றில் எழுதியிருந்தனர். அந்தப் பத்திரிகையின் துவக்க விழாவுக்கு எங்களை ராஜ்பவனுக்கு அழைத்திருந்தார் தமிழக கவர்னர்.

அந்த நிகழ்ச்சியில், தன் பிறந்த நாளையும் எங்களுடன் கொண்டாட விரும்புவதாக அவர் கூறினார். அதேபோன்று, அவர் பிறந்த நாளுக்கு எங்களை அழைத்திருந்தனர். அவருக்காக நானே ஸ்பெஷலாக கேக் செய்து, எடுத்துச் சென்றேன்.

அதைச் சாப்பிட்டு கவர்னர் கொடுத்த, 'பீட்பேக்' வேற லெவல்...

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அவர் மனைவி என்னிடம் பேக்கிங் கற்றுக் கொள்ள விரும்புவதாக கூறி, அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்தார்.

என் கையால் தமிழக கவர்னருக்கு கேக் ஊட்டி விட்டதும், அந்த சந்திப்பும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள்.

அடுத்து ஒரு கபே துவங்கணும். அதில், திருநர் சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கணும். அதுதான் இப்போதைக்கு என் லட்சியம்!

சொல்கிறார்கள்

வாழ்க்கைக்கு பணம் தேவையில்லை அன்பு போதும்!

சென்னையைச் சேர்ந்த, 'டெர்பி' நிறுவனத்தின் நிறுவனர் விஜய் கபூர் -- ராக்கி தம்பதி:

ராக்கி: இவர், 16 வயதில் எனக்கு அறிமுகம் ஆனார். அறிமுகமான ஒரு ஆண்டிலேயே, இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துட்டேன்.

ஆனால், அவரோ அம்மா சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இருந்தார். நான் படிப்பதற்காக, கோல்கட்டா சென்று விட்டேன்; அந்தப் பிரிவு இவருக்கு என் மீது காதலை வர வைத்திருக்கிறது.

என்னை பெண் கேட்டு வந்தபோது, சின்னதாக டெய்லர் கடை தான் வைத்திருந்தார். 'டெய்லரை திருமணம் பண்ணிக்கப் போறியா... ஒரு வருஷத்துல விவாகரத்து வாங்கிட்டு வந்துருவ' என்று, எங்கள் வீட்டில் பயங்கர எதிர்ப்பு.

ஆனால், திருமணம் பண்ணிக்கிட்டோம். அந்த நம்பிக்கை எங்க காதலை மட்டுமில்ல, எங்களோட கேரியரையும் உயர்த்தியிருக்கு.

விஜய் கபூர்: ராக்கி, என் வாழ்க்கையில் வந்த பின் தான் என்னையே ரசிக்க துவங்கினேன். என்னை நம்பி வந்தவங்களை, நல்லா பார்த்துக்கணும், எல்லா வசதிகளோட வாழ வைக்கணும்னு நினைச்சேன்.

கடுமையாக உழைத்து, டெர்பி பிராண்டை துவங்கினேன். பிசினஸ் கொஞ்சம் கொஞ்சமாக சக்சஸ் ஆச்சு.

சொந்த வீடு, கார் என்று வாழ்க்கை வசதியா மாறுச்சு. இதெல்லாம் மனைவியை சந்தோஷமா வைக்கும் என்று நினைத்தேன். நாம தான் சிறந்த கணவர் என்று ரொம்ப கம்பீரமாக சுத்திக்கிட்டு இருந்தேன்.

அப்போது தான் என் எண்ணத்தை சுக்குநுாறாக உடைக்கிற மாதிரி, 'நீங்க உங்கள லவ் பண்றீங்க; என்னை இல்ல. எனக்கு விவாகரத்து வேணும்'னு ராக்கி சொன்னாங்க. அப்போது, என் மகனுக்கு 3 வயது. ஏழு ஆண்டு வாழ்க்கை நொறுங்கிப்போன மாதிரி இருந்தது.

உடனே, இரண்டு பேரும் சேர்ந்து கவுன்சிலிங் போனோம். அப்போது தான் நான் என்ன தவறு செய்தேன்னு யோசிச்சு, அவங்ககூட நேரம் செலவிட துவங்கினேன். அவங்க என்னை திரும்ப ஏத்துக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.

ஒருவழியாக, பிரச்னை சரியாகி வாழ்க்கை சுமுகமாக போயிட்டு இருந்த நேரத்தில், பிசினசில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நாங்க வாழ்ந்து கொண்டிருந்த வீட்டை மனைவியிடம் சொல்லாமல் விற்று, கடனை அடைத்த பின் வீட்டை விற்றது பற்றி கூறினேன்.

வீட்டை விற்றதற்கு சண்டை போடாமல், என் கஷ்டத்தை அவர்களிடம் சொல்லாமல் இருந்து விட்டேன் என சண்டை போட்டாங்க.

வாழ்க்கைக்கு பணம் தேவையில்ல, அன்பு போதும்னு உணர்ந்த தருணம் அது. இப்படி வாழ்க்கையில் நான் பண்ண ஒவ்வொரு தவறையும் திருத்தி மனுஷனா மாத்தியிருக்காங்க. இரண்டு பேரும் சேர்ந்து உழைச்சு பிசினசை பழைய நிலைக்கு கொண்டு வந்தோம்.

காதலிக்கிறது முக்கியம் இல்லை. அந்தக் காதலுக்காக இரண்டு பேரும் சேர்ந்து போராடுவது தான் முக்கியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us