sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

உடல் குறைபாடு உள்ள பலருக்கும் 'ரோல் மாடலாக' இருக்கிறேன்!

/

உடல் குறைபாடு உள்ள பலருக்கும் 'ரோல் மாடலாக' இருக்கிறேன்!

உடல் குறைபாடு உள்ள பலருக்கும் 'ரோல் மாடலாக' இருக்கிறேன்!

உடல் குறைபாடு உள்ள பலருக்கும் 'ரோல் மாடலாக' இருக்கிறேன்!


PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரை சேர்ந்த, 3 அடி 11 அங்குல உயரமே உள்ள, பெண் வழக்கறிஞரான ஹர்வீந்தர் கவுர்: என் அப்பா, போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர்; அம்மா இல்லத்தரசி. எனக்கு ஒரு சகோதரனும் உண்டு.

என்னை தவிர, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சராசரி உயரம் கொண்டவர்கள் தான்.

ஆரம்பத்தில் நான் மிகவும் விரக்தி அடைந்தவளாக இருந்தேன். 'என்னை ஏன் இப்படி படைத்தாய்?' என, கடவுளிடம் கண்ணீர் மல்க கேட்டேன். பல மருத்துவர்களிடம் ஆலோசனை, சிகிச்சைகள் மேற்கொண்டும் என் உயரம் அதிகரிக்கவில்லை.

அந்நேரத்தில் பெற்றோரும், சகோதரரும் நான் சோர்ந்து விடாமல் பார்த்து கொண்டனர். என் படிப்புக்கும், லட்சியத்துக்கும் உறுதுணையாக இருந்தனர்.

'நம்மை கடவுள் இப்படி படைத்திருக்கிறார் எனில் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். நாம் அதை நிறைவேற்ற வேண்டும்' என, சபதமேற்றேன். ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.

சிறு வயதிலேயே விமான பணிப்பெண் ஆக வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால், உயரக்குறைவு தடையாக இருந்ததால், பிளஸ் 2 முடித்தவுடன் சட்டம் பயின்று, வழக்கறிஞர் ஆவதன் வாயிலாக மக்களுக்கு தொண்டாற்ற முடியும் என்று நம்பினேன்.

அப்போது, 'எப்படி உன்னால் ஒரு வழக்கை எடுத்து நடத்த முடியும்? நீதிபதி முன் உன்னால் நிற்கத்தான் முடியுமா?' என, பலரும் ஏளனம் செய்தனர். ஆனால், 'வெற்றிகரமான வழக்கறிஞராவதற்கு உயரக்குறைவு தடையே அல்ல.

தேவைப்படுவதெல்லாம் அறிவும், சட்ட நுணுக்கங்களும் தான்' என கூறி, என் குறிக்கோளில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்து சட்டம் படித்தேன்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சிலில் பதிவு செய்து, வாதாடும் உரிமமும் பெற்றேன். என்னுடன் பணிபுரியும் சக வழக்கறிஞர்கள், எனக்கான மரியாதையை அளித்து என் அறிவையும், சட்ட நுணுக்கங்களையும் மதிக்கின்றனர்.

மேலும், சுயமுன்னேற்றம் அளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அது தொடர்பான கருத்தரங்குகள், விவாத மேடைகளிலும் பங்கேற்கிறேன்.

என் உயரக் குறைவை எதிர்மறை அம்சமாகவே நான் கருதுவதில்லை. மாறாக, தனித்துவமான ஓர் அடையாளம் என்றே பெருமிதமாக உணர்கிறேன்.

உடல் குறைபாடு உள்ள பலருக்கும், 'ரோல் மாடல்' ஆகவே இருக்கிறேன். இந்திய சாதனை புத்தகம், 'இந்தியாவின் மிகக் குறைந்த உயரம் கொண்ட வழக்கறிஞர்' என்று அங்கீகரித்திருக்கிறது.

எதிர்காலத்தில் பெண்கள், குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடுவதே என் லட்சியம்.






      Dinamalar
      Follow us