தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/‘தொழிலில் என் எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறேன்!’

‘தொழிலில் என் எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறேன்!’

‘தொழிலில் என் எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறேன்!’


PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மர பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து, மாதம் 1.50 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும், கோவையைச் சேர்ந்த நிகிலா:

இன்ஜினியரிங் படித்து முடித்ததும், பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். திருமணமாகி குழந்தையும் பிறந்தது. குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.

என் மகனின் முதல் பிறந்த நாளுக்கு வந்தவர்களுக்கு, எங்கள் சார்பாக நன்றி பரிசு கொடுப்பதற்கு, விதவிதமான பொம்மைகள் தேடிக் கொண்டிருந்தேன். நான் எதிர்பார்த்தபடி தனித்துவமான பொம்மைகள் கிடைக்கவில்லை. அதனால், நாமே புதிய பொம்மைகள் செய்யலாம்னு இணையதளத்தில் தேட ஆரம்பிச்சேன். அப்போது தான், மரத்தால் செய்யப்படும் பொம்மைகளான, ‘பெக்டால்’ குறித்து தெரியவந்தது.

மரத்தால் செய்யப்படுகிற எளிமையான மனித உருவ பொம்மை தான் பெக்டால். இதன் பாரம்பரிய வடிவம் ஐரோப்பாவில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சில மாடல்களை படமாக வரைந்து, எங்கள் ஏரியாவில் உள்ள தச்சரிடம் காட்டி, அதேபோல செய்து வாங்கினேன்.

அந்த பொம்மைகளுக்கு, ‘பெயின்ட்’ அடித்து, மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளமான, ‘இன்ஸ்டாகிராமில்’ தொடர்ந்து பதிவிட ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் முயற்சிக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

முதலில் 3,000 ரூபாய்க்கு மர பொம்மைகள் செய்து வாங்கினேன். 2,000 ரூபாய்க்கு, ‘பெயின்ட், பிரஷ்’கள் வாங்கி தொழிலை ஆரம்பித்தேன். தோழியரும், உறவினர்களும் தான் முதலில் வாடிக்கையாளர்களாக இருந்தனர். கல்லுாரி மாதிரியான இடங்களில், ‘ஸ்டால்’கள் அமைத்தேன். ஒரு பொம்மையை 160 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

வாடிக்கையாளர்கள் தனித்துவமான பொம்மைகளை கேட்க ஆரம்பித்தனர். அப்பா, அம்மா, குழந்தைகள் என்று மொத்த குடும்பத்தையும் உருவாக்கினேன். பொம்மைகளோட சேர்த்து, பெயர் பலகைகள் தயாரித்தும் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தரும் புகைப்படங்களுக்கு ஏற்ப பொம்மையை வடிவமைக்க வேண்டும். உடை, நிறம், தோற்றம் என எல்லாவற்றையும் கவனமாக செய்து தர வேண்டும். ஆர்டர் எடுப்பது முதல், பொம்மை உருவாக்கம், வாடிக்கையாளர் கையில் கொண்டு சேர்ப்பது, காணொளி தயாரிப்பு என, எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன். அதனால, ஒரு ஆர்டரை முடிக்க கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை ஆகும்.

இப்போ ஒரு மாதத்துக்கு சராசரியா, 1.50 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. புதுப்புது வடிவங்கள், புது வாடிக்கையாளர்கள்னு எல்லைகளை விரிவுபடுத்தியபடியே இருக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us