sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

விதவிதமான ஆடைகளை விற்கிறேன்!

/

விதவிதமான ஆடைகளை விற்கிறேன்!

விதவிதமான ஆடைகளை விற்கிறேன்!

விதவிதமான ஆடைகளை விற்கிறேன்!


PUBLISHED ON : ஜூலை 28, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலெக் ஷன்ஸ் என்ற பெயரில், சுடிதார் ரகங்களை விற்பனை செய்து வரும், ஈரோட்டைச் சேர்ந்த நித்திலா கவின்: எனக்கு சொந்த ஊர் ஈரோடு. அம்மா டெய்லர். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், புதுப்புது டிசைனில் ஆடை தைத்துக் கொடுப்பார்.

அவரை பார்த்து தான் எனக்கும் ஆடை, 'டிசைனிங்'கில் ஆர்வம் ஏற்பட்டது. அதனால், 'பி.டெக்., பேஷன் டெக்னாலஜி' படித்தேன். படிக்கும் போதே திருமணமாகி விட்டது. 'டெக்ஸ்டைல் பிசினஸ்' செய்ய வேண்டும் என்ற என் ஆர்வத்திற்கு, கணவர் ஊக்கமளித்தார்.

சேமிப்பு பணம், 90,000 ரூபாயை முதலீடாக்கினேன். கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங் களுக்கு சென்று, அங்குள்ள நெசவாளர்களிடம் பேசி, அங்கு என்ன பேஷன், அதில் எனக்கு என்னென்ன கலர், டிசைன் வேண்டும் என்று விளக்கினேன்.

தமிழக நெசவாளர் களிடம் இருந்தும் தனித்துவமான கலெக் ஷன்ஸ் வாங்க ஆரம்பித்தேன். பல வகையான சுடிதார் 'மெட்டீரியல்'களின் படங்களை நெசவாளர்கள் முதலில் அனுப்புவர்; அதில் எனக்கு தேவையானவற்றை தேர்வு செய்து, வாங்குவேன்.

ஆடைகள் வந்ததும், தரத்தை பரிசோதித்து, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்.

என்னிடம், 50க்கும் அதிகமான சுடிதார் ரகங்கள் உள்ளன; ஒரு நாளைக்கு, 150 செட் விற்பனை செய்கிறேன். வீட்டின் ஒரு பகுதியில் வைத்து தான், 'பிசினஸ்' செய்கிறேன். நான்கு பெண்கள் என்னுடன் வேலை பார்க்கின்றனர். மாதம், 10 லட்சம் ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்கிறேன்.

அமெரிக்கா, துபாய், மலேஷியா உட்பட பல்வேறு நாடுகளில், 2 5 ,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

'ஆர்டர்' எடுத்த, 24 மணி நேரத்திற்குள் 'டெலிவரி' செய்து விடுவேன். ஆன்லைனில் பிசினஸ் செய்வது எளிது; ஆனால், வாடிக்கையாளர்களை தக்க வைப்பது சிரமம். தரத்திலும், 'ஸ்டாக்' வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் அடிக்கடி, 'ஸ்டாக் இல்லை' என்று கூறக் கூடாது. அதனால், தினமும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தியபடியே இருப்பேன்.

நேரிலும், புகைப்படத்திலும் ஆடைகளின் கலர் ஒரே மாதிரி இருக்க வேண்டும். காலை, 10:00 முதல் இரவு, 7:00 வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து எப்போது தகவல் வந்தாலும், அதிகபட்சம், அரை மணி நேரத்தில், 'ரிப்ளை' செய்து விடுவேன்.

பிசினஸில் வரும் பிரச்னைகளை, அனுபவம் என்று நினைத்து கடக்கவும், சறுக்கும் போது தளராமல் அடுத்த அடி எடுத்து வைக்கவும் தெரிந்தால், எளிதாக ஜெயிக்கலாம்.

குடும்பம், குழந்தை களுக்கு மத்தியில் எனக்காக நான் உழைத்து, தொழில் முனைவோர் என்ற அடையாளத்தை உருவாக்கி உள்ளேன். நமக்காக நாம் நிற்காமல் வேறு யார் நிற்பர்?

தொடர்புக்கு

86673 93434






      Dinamalar
      Follow us