தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!'

 'நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!'

 'நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!'


PUBLISHED ON : ஜூன் 28, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுயதொழில் செய்து வரும், மதுரை மாவட்டம், கூடல் நகரை சேர்ந்த பெண், கிறிஸ்டி: பெண்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள், இன்னும் பல இடங்களில் இருக்கத் தான் செய்கிறது; நானும் அதை எங்கள் வீட்டில் சந்தித்தேன். 'இதை செய்யாதே, அங்கே போகாதே, இப்படி ஆடை அணியாதே' என்று, எல்லா பக்கமும் அவ்வளவு கண்டிப்புகள் இருந்தன.

நான் இளங்கலை படித்தபோது, அந்த கட்டுப்பாடுகள் என் கனவுகளை முடக்குவது போல உணர்ந்தேன். இப்படிப்பட்ட கண்டிப்பான குடும்ப சூழலில் இருந்தபடி, 'சமூக ஊடகங்களில் பிரபலமாகணும், சொந்த தொழில் செய்ய வேண்டும்' என கூறி, அதற்கான முயற்சியில் இறங்கினால் வீட்டில் விட்டு விடுவரா?

தினமும் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள், சண்டைகள் தொடர்ந்தன. ஒருகட்டத்தில் காவல் நிலையம் வரை செல்லும் அளவு பிரச்னை பெரிதானது.

கல்லுாரியில் இரண் டாம் ஆண்டு படித்தபோது, சமூக ஊடகங்களில் என் காணொளிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதில் பிரபலமானதால், வணிக நிறுவனங்களின் விளம்பரங் களை பதிவேற்றம் செய்தேன்; நல்ல வரவேற்புடன், மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கவும் ஆரம்பித்தேன்.

அது சந்தோஷத்தை யும், தன்னம்பிக்கையை யும் கொடுத்தது. ஆனாலும், வீட்டில் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது, இதில் வரும் வருமானம் எப்போதும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது; நிரந்தரமான ஒரு தொழில் வேண்டும் என்ற எச்சரிக்கையும் மனதில் பதிந்தது.

அதனால், குறைவான முதலீட்டில் தொழில் துவங்கும் யோசனை வந்தது.

கையில் இருந்த சேமிப்பையே முதலீடாக்கி, மக்கள் நடமாட் டம் அதிகம் உள்ள இடத் தில், 'புரூட் சாலட்' எனப் படும் நறுக்கிய பழத்துண்டுகள் விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்தேன்; இப்போது மாதம் 60,000 ரூபாய் வருமானம் வருகிறது.

அடுத்து, பெண்களுக் கான உடைகள் விற்பனைக்கு தனி கடையோ அல்லது, 'ஆன்லைன்' வர்த்தகமோ ஆரம்பிக்க வேண்டும்.

பணம் கொடுக்கும் நம்பிக்கையை வேறு எவரும் கொடுக்க முடியாது. பணம் தான் நம் உண்மையான தைரியம்; அந்த தைரியம், பெண்களுக்கு கிடைக்க வேண்டும்.

என் சொந்த வருமானத்தில் உயர்தர மொபைல் போன், இருசக்கர வாகனம் வாங்கியபோது கிடைத்த சந்தோஷமும், பெருமிதமும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

எல்லா பெண்களுக்கும் இதுபோன்று சொந்த காலில் நிற்கும் தைரியமும், கை நிறைய சம்பாதிக்கும் திறமையும் வர வேண்டும். அப்போது தான் மற்றவர்களை சார்ந்து இல்லாமல், சுயமரியாதை யுடன் வாழ முடியும். இன்னும் சொல்ல போனால், நமக்கே நம் மீது ஒரு மரியாதை வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us