/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நாம் எடுக்கும் 'ரிஸ்க்'தான் நம் அடையாளத்தை மாற்றும்!
/
நாம் எடுக்கும் 'ரிஸ்க்'தான் நம் அடையாளத்தை மாற்றும்!
நாம் எடுக்கும் 'ரிஸ்க்'தான் நம் அடையாளத்தை மாற்றும்!
நாம் எடுக்கும் 'ரிஸ்க்'தான் நம் அடையாளத்தை மாற்றும்!
PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

'ரபில் டிரெண்ட்ஸ்' என்ற பெயரில், சமூக வலைதளங்கள் வாயிலாக, புடவை பிசினஸ் செய்து வரும் சென்னையைச் சேர்ந்த ரேவதி: நாமக்கல் பக்கத்துல ஒரு சின்ன கிராமம் எங்களுடையது.
பி.இ., முடித்து சென்னையில் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துட்டு இருந்தேன். என் கணவரும் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்ததால், சில ஆண்டுகள் அமெரிக்காவிலும் பணியாற்றினோம்.
அங்கு நல்ல சம்பளம்தான் என்றாலும், இந்தியாவிற்கு வந்து சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நிறைய பிசினஸ் ஐடியாக்களுடன் இந்தியா வந்தோம்.
குழந்தை பிறந்திருந்த நேரம் அது. எனக்கும், குழந்தைக்கும் ஒரே மாதிரியான 'டிரெடிஷனல்' டிரஸ்சை தேடித்தேடி வாங்கினேன்.
அப்போது தான், 'கிட்ஸ் வியர்' பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா வந்தது. சில லட்சங்களை முதலீடு செய்து ஆரம்பித்தேன். ஆனால், அதில் வெற்றி யடையவில்லை. அதன்பின் ரெடிமேட் டிரஸ் விற்கும், 'பொட்டிக்' ஆரம்பித்தேன்.
அப்போது, இரண்டாவது குழந்தை பிறந்தது, உடல்நலம் சரியில்லாதது என அந்த பிசினசிலும் என்னால் முழு கவனம் செலுத்த முடியவில்லை.
மேலும், பணியாளர்களை நம்பி பிசினசை ஒப்படைத்ததால் 4 லட்சம் ரூபாய் நஷ்டம். இரண்டு தோல்விக்கு பின்னும், என்னை பிசினஸ் நோக்கி தள்ளியது கணவரும், அப்பாவும் தான்.
அடுத்து, 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் 2017ல் புடவை பிசினஸ் ஆரம்பித்தேன். இந்தியா முழுதும் நிறைய இடங்களுக்கு பயணித்து, பின்னடைவில் இருந்த நெசவாளர்களை சந்தித்து, புடவைகள் வாங்க ஆரம்பித்தேன்.
பிசினசின் அளவு அதிகரிக்கவும், 100 நெசவாளர்களை என் பிராண்டுக்குள் இணைத்துக் கொண்டேன். இதனால், அவர்களுக்கு சரியான உற்பத்தி விலையும், ஆண்டு முழுக்க வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
ஆரம்பத்தில், மாடல்களை வைத்து போட்டோ ஷூட் செய்தேன். ஆனால், மாடல்களுக்கு கொடுக்கும் கட்டணத்தை, புடவையின் அடக்க விலையில் சேர்க்க வேண்டி இருந்தது. அதனால், 'பேசாமல் நீயே மாடலிங் பண்ணு' என, வீட்டில் கூறினர்.
என் பிசினசுக்கான தயக்கத்தை உடைத்து வீடியோக்கள் செய்ய ஆரம்பித்தேன். பிசினசில் இறங்கிட்டால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கணும். பிசினசில் தரத்தை தக்க வைக்க நிறைய மெனக்கிட வேண்டும்.
வாடிக்கையாளர்களிடம் நிறை, குறைகளை கேட்பது, புதுப்புது உற்பத்தியாளர்களை தேடுறது என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் கஷ்டமாக பார்க்காமல், அனுபவமாக பார்த்தால் தான் பிசினஸ் சக்சஸ் ஆகும்.
தற்போது மாதம் 20 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறேன். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ரிஸ்க்தான் நம் அடையாளத்தை மாற்றும்.
தொடர்புக்கு: 73587 00921

