/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பிசினஸ் பக்கமும் கண்களை விரிச்சு பாருங்க பாஸ்!
/
பிசினஸ் பக்கமும் கண்களை விரிச்சு பாருங்க பாஸ்!
PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

திருச்சி, துவாக்குடி அரசு கலை கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு இதழியல் படித்தபடியே, 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' எனும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து தரும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிவசங்கர்:
குடும்ப சூழல் காரணமாக, 6 வயசுல இருந்தே வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன். தினமும், 50 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு கடை வாசல்ல, பொம்மை வேஷம் போ ட்டு நின்னுருக்கேன்.
எனக்கு நல்லா போட்டோ எடுக்க தெரியும் என்பதால், காலேஜ்ல சேர்ந்தப்ப, 'டெக்கரேஷன் பிரேம்ஸ், போட்டோ ஷூட்'னு, 'ஈவென்ட்' நடத்த தேவையான சில வேலைகளை செய்து பார்க்கலாமேன்னு தோணுச்சு.
ஆனா, எங்க போய் ஆர்டர் கேட்கிறதுன்னு தெரியல. என் அண்ணன் பொண்ணு பிறந்த நாளுக்கு நான் பண்ணிய டெக்கரேஷன்ஸ், போட்டோ ஷூட் எல்லாம் பார்த்துட்டு, பலரும் வியந்து பாராட்டினாங்க. அப்படியே சிலர், அவங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரும் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
சொல்லப் போனா, உட்காரக் கூட நேரமே இல்லாத அளவுக்கு நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.
ஒரு பக்கம் படிப்பையும் கவனித்தபடி, எந்த ஆர்டரையும் மி ஸ் பண்ணாம சிறப்பா செஞ்சு கொடுத்தேன். நைட் முழுக்க டெக்கரேஷன் ஒர்க் இருக்கும்.
அதை முடிச்சுட்டு, காலையில் காலேஜுக்கு கிளம்பி போயிடுவேன். கிளாஸ் முடிஞ்சதும், போட்டோ ஷூட்டுக்கு போவேன்.
என்னோட இந்த பார்ட் டைம் வேலை அனுபவத்துல நான் கத்துக்கிட்டது என்னன்னா, கடின உழைப்பும், டைம் மேனேஜ்மென்டும் இருந்தா, எவ்ளோ பெரிய கஷ்டமான வேலையையும் முடிச்சிடலாம்.
வருமானத்தை பொறுத்தவரை, எந்த மாதிரியான ஈவென்ட் என்பதை பொறுத்து சில ஆயிரம் ரூபாய் கிடைக்கும். என் படிப்பு செலவுக்கு வீட்டுல காசு கேட்கிறதே இல்ல.
எல்லாத்தையும் நானே பார்த்துக்குறேன். பிரெண்ட்ஸ், 10 பே ர் சேர்ந்து இதுவரை, 35 அரசு பள்ளி மாணவர்களுக்கு எங்களால முடிஞ்ச சின்ன சின்ன உ தவிகளை செய்துட்டு வர்றோம்.
நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதுல இருந்து, எனக்கு உச்சபட்ச நிறைவு தர்ற விஷயம் இதுதான். ஏன்னா, வறுமையோட கஷ்டம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
'படிப்பை முடிச்சதும், நல் ல சம்பளத்துக்கு வேலைக்கு போகணும்' என்பதை கொஞ்சம் மாத்தி யோசிச்சு, பிசினஸ் பக்கமும் கண்களை விரிச்சு பாருங்க பாஸ்!