தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ தொழிலுக்கு பணம் மட்டும் அவசியமில்லை!

 தொழிலுக்கு பணம் மட்டும் அவசியமில்லை!

 தொழிலுக்கு பணம் மட்டும் அவசியமில்லை!


PUBLISHED ON : பிப் 09, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2026 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து, பால் பண்ணை வியாபாரம் செய்து, மாதம், 1 லட்சம் ரூபாய் வருமானம் பார்த்து வரும், திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்த யோகராஜ்: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான்.

காவல் துறையில் சேர வேண்டும் என்பது என் சிறு வயது ஆசை. ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால், அப்பாவுடன் விவசாயம் பார்த்து வந்தேன்.

எங்களிடம் இருந்த இரண்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலை, பக்கத்து ஊர், பால் பண்ணையில் கொடுத்து, அதில் வரும் வருமானத்தை வைத்து, விவசாயத்தை செய்து வந்தேன். ஆனாலும், விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

கடன் வாங்கி, விவசாயம் செய்தும், போதிய விளைச்சல் இல்லாததால், கடன் கொடுத்தவர்கள் எங்களிடம் இருந்த இரண்டு மாடுகளையும் ஓட்டி சென்று விட்டனர்.

வாழ்க்கையே இருண்டு போன நிலை... இருந்தாலும் சோர்ந்து விடவில்லை. பால் வியாபார தொழிலை விட்டு விலக, எனக்கு மனமில்லை. அப்போது தான், நாம் ஏன் பால் பண்ணை தொழில் துவங்க கூடாது என்று தோன்றியது.

கையில் இருக்கும் சொற்ப பணம், மனைவியின் நகை எல்லாவற்றையும் அடகு வைத்து, பால் பண்ணை துவங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தேன்.

முதல் மாதத்தில் லாபம் வரவில்லை; ஆனாலும் நான் முயற்சியை கைவிட வில்லை. எல்லாரிடமும் சென்று, என் பால் பண்ணைக்கு பால் கொடுக்கும் படி கேட்டேன்.

ஆரம்பத்தில், என் லாபத்தை பார்க்காமல், வாடிக்கையாளர்களின் லாபத்தையும், பால் கொடுப்பவர்களின் லாபத்தையும், உறுதி செய்வதில் கவனம் செலுத்தினேன்.

என் தொடர் முயற்சியும், நம்பிக்கையும் படிப்படியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தேன்.

பால் பண்ணை துவங்கி, இப்போது, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம், பால் கொள்முதல் செய்து, தினமும், 400 லிட்டர் பால் வியாபாரம் செய்கிறேன்.

ஆரம்பத்தில், 'ஒரு மாதத்தில் கடையை மூடி விடுவான்' என்று ஏளனம் செய்தோர் கூட, என் பண்ணையில் தான் பால் வாங்குகின்றனர்.

தொழில் துவங்குவ தற்கு பணம் மட்டும் போதாது. செய்யும் தொழில் குறித்த போதிய அறிவும், தன்னம்பிக்கையும் அவசியம். அவை இருந்தால், எந்த தொழிலாக இருந்தாலும் , நிச்சயம் ஜெயிக்கலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us