தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ அப்பா கற்றுக் கொடுத்த பணப்பாடங்கள்!

 அப்பா கற்றுக் கொடுத்த பணப்பாடங்கள்!

 அப்பா கற்றுக் கொடுத்த பணப்பாடங்கள்!


PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கனத்தின் அவசியம் பற்றி கூறும், தஞ்சாவூர் மாவட்டம், எஸ்.புதுாரைச் சேர்ந்த ஆர்.காவ்யா: வீடும் சரி, நாடும் சரி... சரியான நிதி திட்டமிடல் இருந்தால் தான், அடுத்த கட்டத்துக்கு நகரும்; வளர்ச்சி பாதையில் பயணிக்கும்.

எங்கள் குடும்பம் இன்று நல்ல நிலையில் இருக்கிறது என்றால், அதற்கு மிக முக்கிய காரணம், என் அப்பாவின் பண நிர்வாகம் தான்.

பலரும், தான் சம்பாதிக்கும் பணத்தில் என்ன செலவு செய்கிறோம், எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதில் கணக்கு எதுவும் வைத்துக் கொள்வதில்லை. மனம் போன போக்கில் செலவு செய்கிறவர்களை தான் அதிகம் பார்த்திருக்கிறேன். ஆனால், என் அப்பா அப்படியல்ல.

அப்பா பெயர் இல.ரவி; வயது 63. ஆசிரியராக, 34 ஆண்டுகள் பணிபுரிந்தவர். பணிபுரியும் காலத்தில், அவரை விட குறைந்த சம்பளம் வாங்கியவர்கள், இருசக்கர வாகனம் வாங்கியபோதும், பல கி.மீ., தொலைவில் இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில் தான் சென்று வருவார்.

அவர், சிறு வயதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர்; பணத்தின் அருமையை உணர்ந்தவர். வருமானத்துக்கு மீறி ஒருபோதும் செலவு செய்ய மாட்டார். ஒவ்வொரு பைசாவுக்கும் சரியாக கணக்கு வைத்திருப்பார் .

விலை உயர்ந்த உணவுகள் மீதோ, ஆடை, ஆபரணங்கள் மீதோ அப்பாவுக்கு ஆசையே இருந்ததில்லை. குடும்பத்தினரிடமும், 'தகுதிக்கு மீறி செலவு செய்யக்கூடாது' என்பதை தொடர்ந்து அறிவுறுத்துவார்.

அதே சமயம், குடும்பத்தினரின் முக்கிய தேவைகளை ஒருநாளும் தட்டிக்கழித்ததில்லை.

எங்களை அரசு பள்ளியில் தான் படிக்க வைத்தார்; இன்று நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் தான் இருக்கிறோம். 'கஞ்சத்தனமாக இருக்கிறார், சரியான கருமி' என்று, அவர் காதுபடவே பலரும் கேலி பேசினர்.

ஆனால், அவற்றை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல், 'தேவையில்லாத விஷயங்களை நாம் காதில் வாங்கிக் கொண்டால், கஷ்டம் தான் மிஞ்சும். நாம் கஷ்டப்படும்போது, கேலி பேசுவோர் எவரும் நமக்கு உதவ மாட்டார்கள்' என்று சொல்லி, சிறு புன்னகையுடன் அவற்றை கடந்து சென்று விடுவார்.

அப்படியெல்லாம் அவர் சிக்கனமாக இருந்ததால் தான், இன்று எங்கள் குடும்பத்தில் உள்ளோர் பண கஷ்டம் இல்லாமல் நிம்மதியாக அழகான ஒரு வீட்டில் வசிக்கிறோம்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில், மிக எளிய முறையில் என் அண்ணனுக்கு வீட்டிலேயே திருமணத்தை நடத்தி முடித்தார். மீதமிருந்த ரூபாயில், அண்ணனுக்கு இருசக்கர வாகனமும், அண்ணிக்கு தங்கத்தில் நகையும் பரிசாக கொடுத்தார்.

ஆடம்பரங்களை தவிர்ப்பது, பணத்தை சிக்கனமாக செலவு செய்வது, பாதுகாப்பாக சேமிப்பது... இப்படி என் அப்பாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பணப்பாடங்கள் ஏராளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us