தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ நிம்மதியான வாழ்க்கைக்கு என் மனைவியே காரணம்!

 நிம்மதியான வாழ்க்கைக்கு என் மனைவியே காரணம்!

 நிம்மதியான வாழ்க்கைக்கு என் மனைவியே காரணம்!


PUBLISHED ON : மார் 10, 2026 02:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2026 02:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனைவியின் திட்ட மிட்ட நிதி நிர்வாகத்தால், சொந்த வீடு வாங்கிய வேலுாரைச் சேர்ந்த மூ.மோகன்: இந்தி ய விமானப் படையில், 15 ஆண்டு கள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று, சொந்த ஊரில் குடியேறினோம். எனக்கு குறைவான அளவுக்கே ஓய்வூதியம் கிடைத்தது.

ஆனாலும், நாங்கள் கூட்டுக் குடும்பமாக இருந்ததால், வாழ்க்கை ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. மூன்று ஆண்டுகள் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தேன்.

என் மகனை பள்ளியில் விட்டுவிட்டு, நுாலக மே கதி என்று இருந்தேன். அப்போது எனக்கு சில விஷயங்களை எடுத்துச் சொல்லி, மீண்டும் வேலைக்கு செல்ல வைத்தது, என் மனைவி அருணா தான்.

மனைவியின் அறிவுரையை ஏற்று, கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தேன்; சொற்ப வருமானமே கிடைத்தது. ஆனாலும், வருமானத்துக்கு ஏற்ப, நேர்த்தியாக திட்டமிட்டு, மனைவி குடும்ப செலவுகளை செய்தார். கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது ஒரு கலை என்று தான் சொல்ல வேண்டும்.

எந்தெந்த செலவுகளை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை துல்லியமாக அளவிட தெரிந்தாலே போதும். குறைந்த வருமானத்திலும் நிறைவாக வாழலாம். இந்த விஷயத்தை மனைவியிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

திடீ ரென உருவான ஒரு நெருக்கடியின் போது, எங்களுக் கு இருந்த ஒரே பூர்வீக சொத்தான வீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து விட்டோம். வீடு விற்றதில், என் பங்காக கணிசமான ஒரு தொகை கிடைத்தது.

அந்த தொகையை சரியான வகையில் முதலீ டு செய்ய வலியுறுத்தினார் என் மனைவி. அந்த முதலீடு வளர்ந்து, பல சூழல்களிலும் எனக்கு கைகொடுத்து உதவியது.

இதற்கிடையில், கிடைத்த வேலைகளை பார்த்து கொண்டே ரயில்வே, வங்கி பணிக்கு என பல போட்டித் தேர்வுகளை எழுதினேன். மூன்று தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தேன். என் மனைவி ஆலோசனைப்படி ரயில்வே பணியில் சேர்ந்தேன்.

இந்த சூழலில், படுத்த படுக்கையாக இருந்த என் அப்பா, திடீரென இறந்து விட்டார். அதன்பின், வேலை காரணமாக, கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து, வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிலை வந்தது. வீட்டு வாடகை, குடும்ப செலவுகளை சமாளித்து, எங்கள் குடும்பத்தாருக்கும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தேன்.

சொந்த வீடு வாங்க திட்டமிட்டபோது, என் மனைவியின் பண நிர்வாகம் காரணமாக, கணிசமான அளவுக்கு சேமிப்பில் பணம் இருந்தது. பற்றாக்குறைக்கு நகைகள் மற்றும் வங்கிக்கடன் மூலம் வீடு வாங்கி, இன்று அந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.

எங்களுடைய இந்த நிம்மதியான வாழ்க்கைக்கு மூல காரணம், என மனைவியின் நிதி நிர்வாகம் தான் என்பதில், எனக்கு மிகுந்த பெருமை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us