/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உயிர்க்கொல்லியாகும் 'ஹார்மோன்' மாத்திரை!
/
உயிர்க்கொல்லியாகும் 'ஹார்மோன்' மாத்திரை!
PUBLISHED ON : மே 09, 2019 12:00 AM

சித்த மருத்துவர், வி.ஜமுனா: பெண்கள் உடல் பரிசோதனை செய்யப் போனால், மருத்துவர் கேட்கும் முதல் கேள்வியே, 'நீங்கள் தொடர்ச்சியாக மாத்திரை எதுவும் சாப்பிடுகிறீர்களா?' என்பது தான். குறிப்பாக, புற்றுநோய் சம்பந்தமாக பிரச்னை ஏதும் இருக்கிறதா என, கண்டறிய போனால், இந்த கேள்வி கண்டிப்பாக வரும்.எங்கோ ஒரு இடத்தில், மார்பக புற்றுநோய் வந்தது என்ற நிலை போய், இப்போது, மிக தெரிந்த குடும்ப வட்டத்துக்குள்ளேயே பலருக்கும், இதுபோல் நிகழ்வது கவலைக்குரியது. இதற்கு, தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், ஒரு பெரும் காரணிகளாக அமைந்து விடுகின்றன; குறிப்பாக, மாதவிடாய் சம்பந்தமாக எடுக்கும் மாத்திரைகள்.
குழந்தையை தள்ளி போட உபயோகிக்கும் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள், விருந்து, விசேஷத்தில் பங்கேற்க, மாதவிடாயை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போட உபயோகப்படுத்தும் மாத்திரைகள் அனைத்தும், மார்பக புற்றுநோயை வரவைப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன.என்னிடம் சிகிச்சைக்கு வருவதற்கு முன், ஒரு பெண், 10 ஆண்டுகள் தொடர்ந்து, மாதவிடாய் குளறுபடியை சரிசெய்யும் மாத்திரை களை சாப்பிட்டு இருந்திருக்கிறார். பொதுவாக, இதுபோல் மாதவிடாய் வரவழைக்க தரப்படுபவை, 'ஹார்மோன்' மாத்திரைகள். அவற்றை தொடர்ந்து, 10 ஆண்டுகள் சாப்பிட்டிருக்கக் கூடாது; அது, அவருக்கு தெரியவில்லை.
குழந்தையில்லா சிகிச்சைக்காக என்னிடம் வந்த பெண்ணுக்கு, குழந்தையும் நல்லபடியாக பிறந்தது. ஆனால், அடுத்த மூன்றாண்டுகளில், அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது, உறுதி செய்யப்பட்டது. அப்போது, புற்றுநோய் மருத்துவர் கேட்ட முதல் கேள்வியே, 'நீங்கள் எப்போதாவது மாதவிடாய் பிரச்னைக்காக, 'ஹார்மோன்' மாத்திரைகள் எடுத்துக் கொண்டீர்களா?' என்பது தான்.தொடர்ந்து, 10 ஆண்டுகளாக அந்த மாத்திரைகளை சாப்பிட்டதை கூறியதும், அதிர்ந்த மருத்துவர், அவை தான் புற்றுநோயை வரவழைத்துஉள்ளதாக கூறியிருக்கிறார்.
எனவே, மாதவிடாய் பிரச்னைக்காக மருத்துவர்கள், 'ஹார்மோன்' மருந்துகள் தந்தாலும் கூட, அவற்றை மூன்று மாதங்களுக்கு மேல், எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்தளவுக்கு அவை, மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.'ஹார்மோன்' மாத்திரைகளால், மார்பக புற்றுநோய் வருவது மட்டுமல்ல, சினைப்பை புற்றுநோயும் வர, அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அவர்கள் பரம்பரையில் புற்றுநோய் இருந்திருந்தால், சீக்கிரமே வர வாய்ப்பு இருக்கிறது; கவனத்துடன் இருப்பது நல்லது.

