sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

உஷ்ணம் குறைக்கும் பச்சிலை!

/

உஷ்ணம் குறைக்கும் பச்சிலை!

உஷ்ணம் குறைக்கும் பச்சிலை!

உஷ்ணம் குறைக்கும் பச்சிலை!


PUBLISHED ON : ஏப் 26, 2020 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2020 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடையில் ஏற்படும் கண் எரிச்சல், நாவறட்சி, முகப்பரு, வேனிற்கட்டிகள், தலைவலி, துாக்கமின்மை போன்ற பல பிரச்னைகளை தீர்க்கும் திருநீற்றுப் பச்சிலை பற்றி, இயற்கை மற்றும் மூலிகை ஆர்வலர் நாச்சாள்:

திருநீற்றுப் பச்சிலை, பார்ப்பதற்கு, பச்சை நிறத்தில், நல்ல மணத்துடன் இருக்கும். நல்ல குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த மூலிகைக்கு, விபூதி பச்சிலை, சப்ஜா என, பல பெயர்கள் உண்டு. எத்தனை பெயர் கொண்டிருந்தாலும், குளிர்ச்சி தான் இதன் அடையாளம்.நாட்டு மருந்துக் கடைகளில், 'சப்ஜா' என்று கேட்டால், சிறிய அளவில் விதைகளை கொடுப்பர். அதை வாங்கி வந்து, நான்கைந்து மணி நேரம் தண்ணீரில் ஊற போட்டு, பின் அவற்றை எடுத்து, நான்கைந்து மணி நேரம் உலற விட்டால், திருநீற்றுப் பச்சிலை செடிக்கான விதை கிடைத்து விடும்.தொட்டியில் அல்லது வீட்டு தோட்டத்தில், இந்த விதைகளை துாவி, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வர, இரண்டு, மூன்று வாரங்களில் இந்த மூலிகை வளரத் துவங்கி விடும். அவ்வப்போது, அரிசி களைந்த நீர், புளித்த மோர் கலந்த நீர் போன்றவற்றை இதில் ஊற்றி வர, சிறப்பாக வளரும். இதன் இலையும், விதையும் மருத்துவ குணம் கொண்டவை. இதை வீட்டுத் தோட்டத்தில் வைத்தால், இதன் நறுமணம், பூச்சிகளை விரட்டும்; பிற செடிகள் ஆரோக்கியமாக வளரவும் உதவும்.

இந்த இலைகளை வாயில் போட்டு மென்றால், வாயில் காணப்படும் சூடு குறையும். இந்த மூலிகை சாறுடன், தேன் கலந்து பருக, வாயு பிரச்னை தீரும். கோடையில் பலருக்கும் சிறுநீர் பிரிவதில் பிரச்னை இருக்கும். அத்துடன் நீர்க்கடுப்பு, சிறுநீர் பிரியாமை போன்ற பல தொந்தரவுகளுக்கு, திருநீற்றுப் பச்சிலை டீ குணமளிக்கும். இதன் இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தேநீர் போல அருந்தி வர, இந்த பிரச்னைகள் தீரும்.

சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு, நன்னாரி அல்லது தேன் கலந்து, குளிர்பானமாக பருகினால், வயிற்றுக்கடுப்பு, ஆசனவாய் கடுப்பு, ரத்தக்கழிச்சல் போன்ற பிரச்னைகள் குணமாகும்; உடல் சூட்டை தணிக்கும்.தலைவலி, துாக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு, இதன் இலைகளை நுகர்ந்தால், தீர்வு கிடைக்கும். இரவில் துாங்கச் செல்லும் முன், இந்த இலைகளை சிறிது நேரம் நுகர்ந்தால், நல்ல துாக்கம் வரும். தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன், இந்த மூலிகையை சேர்த்து, தலைக்கு தேய்த்து வர கண்ணில் இருக்கும் சூடு, தலை உஷ்ணம் போன்ற பிரச்னைகள் நீங்கும். ஒவ்வொரு வீட்டிலும், கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை இது!

'பைக்' ஓட்டினால் பயமெல்லாம் பறந்து விடும்!


'பைக்'கில் தனியாக பயணம் மேற்கொள்ளும் தேன்மொழி: பிறந்து வளர்ந்தது, கரூர் மாவட்டம், வெள்ளையகவுண்டன்பட்டி கிராமம். பி.எஸ்சி., படித்துள்ளேன்.சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். பைக் தான், என் வாழ்க்கையின் பெரிய அங்கம். என் அத்தனை, 'பாசிட்டிவ் எனர்ஜி'க்கும், பைக் தான் காரணம். டி.வி.எஸ்., - 50 வண்டியை, 10வது வயதில் ஓட்டத் துவங்கினேன்.

முறையாக பைக் ஓட்ட ஆரம்பித்தது, 15 வயதில். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பைக் ஏறி, ஊர் சுற்றுவேன். நிறைய பிளான் பண்ணி, அவ்வப்போது, 'லாங் ரைட்' போவதுண்டு. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை, தனியாக ஓட்டிட்டு போயிருக்கிறேன். சென்னையிலிருந்து கேரளாவுக்கு, 700 கி.மீ., கர்நாடகாவில், 350 கி.மீ., தனியாக பைக் ஓட்டி சென்று வந்துள்ளேன். அப்புறம், அடிக்கடி, சென்னை - புதுச்சேரி, 'ரைட்' போவேன். எப்பவுமே, பைக் ஓட்டத் துவங்கும் போது, 'இதெல்லாம் நமக்குத் தேவை தானா' என, மனம் சொல்லும்; கொஞ்சம் பயமும் இருக்கும். பைக்கை, 'ஸ்டார்ட்' பண்ணி, 5 கி.மீ., தாண்டியதும், பயமெல்லாம் பறந்து போயிடும்.

அனுபவித்து ஒரு விஷயம் செய்யும்போது கிடைக்கும் மன நிறைவு தான் பெரியது.முதல் முறையாக, பைக்கில், கரூரிலிருந்து சென்னை வரும்போது, பெரிய அளவிலான பயம் என் கண்ணுக்குள் இருந்தது. அப்போது என் முயற்சிக்கு, யாரும் ஆதரவாக இல்லை. இருந்தாலும், என் கனவை நோக்கிப் பயணம் செய்தேன். தைரியத்தை வளர்த்து, எனக்குப் பிடித்ததை செய்கிறேன். இன்னமும் சாதிப்பேன் என்ற நம்பிக்கை, என்னை போலவே, என் அம்மாவுக்கும் வந்து விட்டது.

ஒரு முறை, சென்னையிலிருந்து கரூருக்கு பைக் ஓட்டி போகும்போது, சென்னை விமான நிலையம் அருகே வரும்போதே, மழை வந்து விட்டது; 10 நிமிடங்கள் நின்று பார்த்தேன்; மழை விடவில்லை. காத்திருப்பதால் பயனில்லை என நினைத்து, பைக்கை ஸ்டார்ட் செய்து, மழையிலேயே ஓட்டிக் கொண்டு சென்றேன்.சென்னை - - கரூர் வரை, ஏழு மணி நேரமும் மழை தான். வீடு போய் சேர்ந்ததும், எப்படி ஓட்டிட்டு வந்தேன்னு எனக்கே ஆச்சர்யம்.

சென்னையிலிருந்து தென் பகுதிகளில் தான், இதுவரைக்கும் ரைட் பண்ணியிருக்கேன். வடக்குப் பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என ஆசை உள்ளது. கடைசி கட்ட, 'டார்கெட்' என்ன தெரியுமா... உலகத்தையே, பைக்கில் ரவுண்ட் அடிக்கிறது தான். என்னை மாதிரி, பைக் ரைடராக வேண்டும் என்ற ஆசை இருந்தும், பைக் வாங்க முடியாத மிடில் கிளாஸ் பெண்களுக்காக, கிளப் ஆரம்பித்து, அவர்களை பைக் ஓட்டச் செய்ய வேண்டும் என்ற திட்டம் வைத்திருக்கிறேன்!






      Dinamalar
      Follow us