sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உங்க வீடு உங்களை பிரதிபலிக்கணும்!

சென்னையைச் சேர்ந்த முன்னணி, 'இன்டீரியர் டிசைனர்' நீத்தா:சென்னைப் பொண்ணு நான். சிறு வயதில் தீவிரமான ரத்த சோகை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தேன். முடி உதிர்வு மிகவும் அதிகமாக இருந்தது. மண்டை தெரியும் அளவுக்கு உதிர துவங்கியபோது தான், அது நார்மல் இல்லைன்னு புரிஞ்சது.

எப்போதும் சோர்வாக உணர்வேன்; பசியே இருக்காது. குளிர் தாங்க முடியாது.

கூடப் படிக்கிற மற்ற பிள்ளைங்க, 'ஆக்டிவ்'வாக விளையாடுவாங்க; என்னால் முடியாது. இதையெல்லாம் வைத்து தான், 'இது சீரியசான பிரச்னை' என்று சந்தேகப்பட்டோம். இது தலசீமியா பாதிப்பு மாதிரி தெரியுதுனு சொல்லி, அந்த பரிசோதனையும் செய்தோம். நல்லவேளை அது அப்படியில்லை; தீவிர அனீமியாதான்னு முடிவுக்கு வந்தாங்க.'அனீமியாவுக்காக அலோபதி, ஹோமியோபதினு பார்க்காத ட்ரீட்மென்ட் இல்லை. ஒரு கட்டத்தில், 'இது தான் என் வாழ்க்கை; இனிமே இப்படித் தான் இருக்கப் போகுது' என்ற மனநிலைக்கு வந்துட்டேன்.

எல்லா இடங்களிலும் ஒதுக்கப்பட்டேன். நண்பர்கள் யாரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். என்னிடம் இரக்கத்துடன் நடந்து கொண்டதில்லை. 'இவ்வளவு குறைவான, 'ஹீமோகுளோபின்' அளவை வைத்துக் கொண்டு, எப்படி நடமாடுறீங்க'ன்னு கேட்டார் மருத்துவர் ஒருவர். முதல் வேலையாக, சத்தான உணவுகளுக்கு மாறினேன்.

தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய் முதல் ஷாம்பூ வரை, ரசாயன பொருட்களை தவிர்த்தேன்.மூலிகை கலந்த எண்ணெயை பயன்படுத்தும் போது, அதில் பயங்கரமான வாடை வரும். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன். வேலை விஷயமாக மும்பை போனேன். அங்கே போனதும் அந்த ஊர் தண்ணீர், 'ஸ்ட்ரெஸ்' இல்லாத வாழ்க்கை, புதுச்சூழலா, என் வேலையா, நான் எடுத்துக் கொண்ட ட்ரீட்மென்ட்டா என தெரியவில்லை. பிரச்னை சிறிது சிறிதாக குறைய துவங்கியது.

தலையில் முடி வளர துவங்கியது. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தேன்.பிறந்தது முதல் என்னை வழுக்கையாகவே பார்த்து பழகியிருந்த என் குடும்பத்தார், முடி வளர்ந்த என் தலையைப் பார்த்து சந்தோஷப்பட்ட அந்தத் தருணத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது; அந்த

நொடிகள் மகிழ்ச்சி இன்னும் குறையாமல் இருக்கிறது.நான் இன்று சென்னையின் முன்னணி இன்டீரியர் டிசைனர். நிறைய ரெசிடென்ஷியல் மற்றும் கமர்ஷியல் புராஜெக்ட்ஸ் செய்திருக்கிறேன். உங்க வீடு என்பது உங்க சந்தோஷத்திற்கான இடம். அழகியலுக்கேற்றபடி, 'இந்த பெயின்ட் நல்லாருக்கும், இந்த பர்னிச்சர் நல்லாருக்கும்' என, நாங்கள் அட்வைஸ் கொடுக்கலாம்.

அதையெல்லாம் தாண்டி, அந்த வீட்டில் உங்க மனசு நிறைஞ்சிருக்கணும்; உங்க வீடு உங்களை பிரதிபலிக்கணும்.

'பாடி பில்டிங்' பற்றி தெரிந்து கொள்வது பெண்களுக்கு அவசியம்!

பெண்கள் அதிகம் நுழையாத, 'பாடி பில்டிங்' துறையை தேர்ந்தெடுத்து, ஜொலித்து வரும், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த தீபிகா சவுத்ரி:

என் தந்தை

குடிகாரர். எனவே, அவரது ஆதரவு குடும்பத்திற்கு இல்லை. தாயின் பாதுகாப்பில் தான் வளர்ந்தேன். அமெரிக்காவில் உள்ள, 'பாம்ப்ஷெல்ஸ் பிட்னஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான, ஷான்னான் டே என்ற பெண்ணை பார்த்த பின் தான், பாடி பில்டராக வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது.

நான் இந்த துறையை மிகவும் நேசிக்கிறேன். என் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் ஆதரவுடன் இருக்கின்றனர். 2012ல், 'புரொபஷனல் பிகர் அத்லெட்'களை முதன் முறையாக டில்லியில் இருக்கும், 'ஷேரு கிளாசிக்' என்ற பாடி பில்டிங் நிகழ்வில் பார்த்தேன்.

அவர்களுடைய நிகழ்ச்சிகளை கண்ட பின், 'நாமும் அவர்களை போல மாற வேண்டும்' என்ற எண்ணம் எனக்கு உதித்தது.

'இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் பாடி பில்டிங்' என்ற சர்வதேச உடற்கட்டமைப்பு கூட்டமைப்பின் சார்பு அட்டை வைத்திருக்கும் ஒரே இந்திய பெண்மணி, நான் மட்டும் தான்.

பிகர் டிவிஷனின் கீழ், 'புரொபஷனல் அத்லெட்' என்ற அங்கீகாரத்தை, 'இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் பாடி பில்டிங்' அமைப்பிடம் இருந்து பெற்றிருக்கிறேன்.

இந்த துறையிலும் கால் பதித்து, 'இந்தியாவின் முதல் பெண் பாடி பில்டர்' என்ற பெருமையை பெற்றிருக்கிறேன். சர்வதேச அளவில் பாடி பில்டிங்கில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்ணும் நான் தான்.

'பாடி பில்டிங்' தற்போது வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. பெண்களும் அதில் பங்கேற்க முன்வருவதை கண்டு

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெண் பாடி பில்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு பயிற்சிகளை முறையாக அளிக்க, தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் இன்னமும் தேவை. தற்போதைய பாடி பில்டர்களுக்கு, குறிப்பாக, பெண் பாடி பில்டர்களுக்கு அரசிடமிருந்து மிகக்குறைந்த அளவே பொருளாதார உதவி கிடைக்கிறது; இந்நிலை மாற

வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்ற மனப்பான்மையும் பரவலாக இருக்கிறது; அந்த எண்ணத்திலும் மாற்றம் வேண்டும்.இந்த துறையில் சாதிக்க விரும்பும் ஒரு பெண்ணுக்கு உடல் வலிமையுடன், கூடவே மிகுந்த மன வலிமையும், தன் இலக்கை எட்டுவதற்கு தேவைப்படுகிறது. இந்த துறையைத் தேர்ந்தெடுக்கும் பல பெண்கள், குடும்பம் மற்றும் சமூக அழுத்தங்களின் காரணமாகவும், சமுதாயக் கண்ணோட்டத்தின் காரணமாகவும், பாதியிலேயே வெளியேறுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

'பாடி பில்டிங்' பற்றி, பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us