/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சம்பங்கி சாகுபடியில் ஓராண்டில் ரூ.3 லட்சம் லாபம்!
/
சம்பங்கி சாகுபடியில் ஓராண்டில் ரூ.3 லட்சம் லாபம்!
சம்பங்கி சாகுபடியில் ஓராண்டில் ரூ.3 லட்சம் லாபம்!
சம்பங்கி சாகுபடியில் ஓராண்டில் ரூ.3 லட்சம் லாபம்!
PUBLISHED ON : டிச 13, 2025 03:01 AM

சம்பங்கி பூக்கள் சாகுபடியில், நிறைவான லாபம் ஈட்டும் அரியலுார் மாவட்டம் தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கு.சின்னப்பா: எனக்கு சொந்த ஊர் இதுதான். தேவமங்கலம் வேளாண் கூட்டுறவு சங்க செயலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். அதன்பின், விவசாயத்தில் முழுமூச்சாக ஈடுபட முடிவு செய்தேன்.
விவசாயத்தில் தினசரி வருமானம் பார்க்க, பெரும்பாலும் காய்கறிகள் பயிரிடுவர். அடுத்தபடியாக, மலர் சாகுபடிக்கும் இடமுண்டு. ஆண்டு முழுதும் விற்பனை வாய்ப்பு இருப்பதால், சம்பங்கி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனக்கு குடும்ப சொத்தாக, 7 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. அதில், 4 ஏக்கரில் சவுக்கு, தைல மரங்கள் வளர்க்கிறேன். தினசரி வருமானம் கிடைக்கும் வகையில், 3 ஏக்கரில் ஏதாவது சாகுபடி செய்ய யோசித்ததில், சம்பங்கி நல்ல தேர்வாக இருந்தது.
சம்பங்கி சாகுபடியை பொறுத்தவரை, தண்ணீர் வசதி இருந்தால் எந்த மாதம் வேண்டுமானாலும் நடவு செய்யலாம். சில பண்ணைகளுக்கு சென்று, விவசாயிகளிடம் ஆலோசனை பெற்று, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 2 ஏக்கரில் சம்பங்கி சாகுபடியை துவங்கினேன்.
நடவு செய்த, 150வது நாளில் இருந்து மகசூல் கிடைக்க ஆரம்பித்தது. முதல் முறை, 5 கிலோ பூக்கள் கிடைத்தன; அதன்பின், படிப்படியாக மகசூல் அதிகரிக்க ஆரம்பித்தது.
ஒரு நாளைக்கு சராசரியாக, 18 கிலோ பூக்கள் கிடைக்கின்றன. ஆண்டு முழுதும் சம்பங்கி பூக்கும். பனிக்காலங்களில் மட்டும் விளைச்சல் குறைவாக இருக்கும்.
தினமும், சராசரி யாக, 18 கிலோ வீதம், மாதம், 540 கிலோ பூக்களும், ஆண்டுக்கு, 6,480 கிலோவும் கிடைக்கிறது.
சாதாரண நாட்களில், 1 கிலோவுக்கு குறைந்தபட்சம், 50 முதல் அதிகபட்சம், 100 ரூபாய் கிடைக்கும். பண்டிகை, முகூர்த்தம் மற்றும் கோவில் திருவிழா காலங்களில், கிலோ, 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகும்.
அந்த வகையில், கடந்தாண்டு, 1 கிலோவுக்கு, 84 ரூபாய் வீதம், 6,480 கிலோ பூக்களுக்கு, 5.44 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
உழவு, எரு, பாசனம், அறுவடை, போக்குவரத்து செலவு போக, 3 லட்சம் ரூபாய் லாபம் வந்தது. அனைத்து வேலைகளுக்கும் ஆட்களை நியமித்து தான் விவசாயம் செய்கிறேன்.
அதனால், கொஞ்சம் கூடுதலாக செலவாகிறது. முதல் முயற்சியிலேயே இந்தளவு லாபம் கிடைத்ததை நிறைவாகவே உணர்கிறேன்.
முதல் முறையாக, இயற்கை விவசாயத்தில் பயிர் செய்துள்ளேன். போக போக இன்னும் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன். இம்முறை கூடுதலாக ஒரு ஏக்கரில் சம்பங்கி நடவு செய்து உள்ளேன்.
தொடர்புக்கு:
98423 05085

