/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சமூக பொறுப்புடன் வியாபாரம் செய்வதில் மனநிறைவு!
/
சமூக பொறுப்புடன் வியாபாரம் செய்வதில் மனநிறைவு!
PUBLISHED ON : டிச 23, 2025 03:46 AM

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாரா டக்கர் கல்லுாரிக்கு அருகில்,
'நம்ம வீட்டு சுவை' என்ற உணவகத்தை நடத்தி வரும் 43 வயதான
வித்யாலட்சுமி: நான், பி.காம்., முடித்துள்ளேன். கணவர் எம்.சி.ஏ., முடித்து விட்டு சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து
வந்தார். நான் இல்லத்தரசியாக இருந்தேன்.
என் மாமியாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, பரிசோதித்ததில் புற்று நோய் என்று உறுதியானது. வாழ்க்கை முறை மாற்றத்தையும், உணவு பழக்கத்தை
யுமே அதற்கு காரணமாக கூறினர்.கலப்படம் இல்லாத பாரம்பரிய உணவுகள்
சார்ந்து இயங்குவதை இலக்காக தீர்மானித்தோம். அதனால், வேலையை விட்டு விட்டு, சொந்த ஊரான திருநெல்வேலிக்கே வந்து விட்டோம்.
சில ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து மஞ்சள், தனியா என்ற கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய் இவற்றை எல்லாம் உரலில் இடித்து, துாளாக்கி, 50 கிராம், 100 கிராம் என, வீட்டில் இருந்தே விற்பனை செய்ய ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் பொருளாதாரரீதியான சிக்கல்
இருந்தது.
நாளடைவில் வருமானம் அதிகரிக்கவே, கடையை துவக்கினோம்; ஆயினும், செலவுகள் அதிகமாகின. சூழலைvசமாளிக்க மசாலா பொடிகளுடன் சேர்ந்து கொழுக்கட்டை,
சுண்டல், பிஸ்கட், பருப்பு உருண்டைகள்என, பாரம்பரிய உணவு வகைகளையும் விற்பனை
செய்ய துவங்கினோம்.
இடித்து தயாரிக்கிறஉணவுகள் தான் எங்களின் சிறப்பம்சம். ஆரம்பத்தில் குறைவான அளவு விற்பனையான போது, கைகளால் இடித்து செய்தோம். ஆர்டர்களும், வாடிக்கையாளர்களும் அதிகமானதால், மூலப்பொருட்களை இடித்து மாவாக்கும் இயந்திரங்களை, அதாவது, அசல் அமைப்புகளைமாற்றாமல், நம் தேவைக்கேற்ப அதன் அம்சங்களை மாற்றம் செய்து வாங்கினோம். சில லட்சம் ரூபாய் கூடுதல் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தினோம்.
மூலப்பொருட்களைவிவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்குகிறோம். தற்போது, எங்களிடம் எட்டு பேர் வேலை பார்க்கின்றனர். எங்கள் கடையில், 60க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறோம். மாதத்திற்கு, 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறோம். ஐ.டி., கம்பெனியோடு ஒப்பிடும் போது வருமானம் குறைவு தான். ஆனால், சமூக பொறுப்புடன் வியாபாரம் செய்யும் மனநிறைவு கிடைக்கிறது.
குறிப்பாக, நாங்கள்கைகட்டி சம்பளம் வாங்கவில்லை. சம்பளம் கொடுக்கும் அளவுக்கு எங்கள் தகுதியை உயர்த்தி இருக்கிறோம்.தொடர்புக்கு 90809 17281

