sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/சொல்கிறார்கள்/ வண்ண மீன்கள் வளர்ப்போமா?

 வண்ண மீன்கள் வளர்ப்போமா?

 வண்ண மீன்கள் வளர்ப்போமா?


PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, புழல் கதிர்வேடு பகுதியில், 15 ஆண்டுகளாக, 'அக்வா ஸூ' என்ற பெயரில், வண்ண மீன்கள் வளர்த்து, விற்பனை செய்து வரும், அபிதா பேகம்:

ஆரம்பத்தில், 1,200 சதுர அடி கடையில் துவங்கிய என் வியாபாரம், இன்று 8,000 சதுர அடி கடையாக விரிவடைந்திருக்கிறது. வண்ண மீன்கள் விற்பனையில், இந்தியாவின் முக்கியமான பெரும் மொத்த வியாபாரியாகவும் உள்ளேன்.

வண்ண மீன்கள் வளர்ப்பு என்பது, உயிருள்ள ஜீவன்களுடன் பயணிக்கும் ஒரு வியாபாரம். எனவே, அது குறித்த அடிப்படைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

குட்டி ஈனும் வகை, முட்டை இடும் வகை என, மீன்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். புதிதாக இந்த வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள், தானாக குட்டிகளை ஈனும் மீ ன் வகைகளை தேர்வு செய்து வளர்க்கலாம்.

முட்டையிடும் வகை மீன்களை வளர்ப்பது, ஆரம்பத்தில் சற்று சவாலாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை கொளத்துார் தான் வண்ண மீன்களுக்கான பெரிய மையம்.

அங்கு சென்று பார்த்து, தேவையான மீன்களை வாங்கலாம். அதன்பின் நாமாகவே மீன்களை இனப் பெருக்கம் செய்யலாம்.

வீட்டில் சிமென்ட் தொட்டி இருந்தால், அதன் மீது ஷீட் போட்டு மீன்களை வளர்க்கலாம்; அதற்கான வசதி இல்லை என்றால், 400 சதுர அடிக்கு ஓர் அறை இருந்தால், அதில் கண்ணாடி தொட்டிகள், அவற்றை வைப்பதற்கு அடுக்கு தட்டு போன்றவற்றை அமைத்து, மீன்களை வளர்க்கலாம்.

மீன்களுக்கான பிராண வாயு மோட்டார், நீர் சுத்திகரிப்பு மோட்டார் உள்ளிட்ட அடிப்படை அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படலாம்.

நீரின் தட்பவெப்பத்தை பராமரிப்பது, எந்த மீனுடன் எந்த வகை மீனை தொட்டியில் சேர்த்து வளர்ப்பது போன்ற விஷயங்களையும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மீன்களின் உற்பத்தி அதிகமாக இருந்தால், மொத்த வியாபாரமாகவோ, அருகில் உள்ள சிறிய கடைகளுக்கோ விற்பனை செய்யலாம். அதற்கும் சற்று குறைவான அளவு உற்பத்தி இருந்தால், வாடிக்கையாளரிடம் நேரடியாக விற்பனை செய்யலாம்.

இதுதவிர, சமூக வலைதளங்கள் வாயிலாக ஆர்டர் எடுத்தும் விற்பனை செய்யலாம். வாடிக்கையாளரிடம் நேரடியாக விற்பனை செய்யும் போதே, மாதம், 25,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.

அரசு சார்பிலும், மீன்வளத்துறை, சிறு,குறு, நடுத்தர தொழில் துறை சார்பிலும், வண்ண மீன்கள் வளர்ப்பு பற்றிய சான்றிதழ், டிப்ளமா படிப்புகள் வழங்கப் படுகின்றன.

இது தவிர, எங்களை போன்ற பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களிடம் பயிற்சி பெறுவதன் வாயிலாகவும், மீன்கள் வளர்ப்பு குறித்த அடிப்படையை கற்றுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us