sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 04, 2026 ,சித்திரை 21, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

 திறமை மற்றும் தரத்தால் வெற்றி!

/

 திறமை மற்றும் தரத்தால் வெற்றி!

 திறமை மற்றும் தரத்தால் வெற்றி!

 திறமை மற்றும் தரத்தால் வெற்றி!


PUBLISHED ON : மே 04, 2026 01:37 AM

Google News

PUBLISHED ON : மே 04, 2026 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தேகா' என்ற நிறுவனம் வாயிலாக, இயற்கை முறையில், அழகு சாதன பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வரும், கோவையை சேர்ந்த, 30 வயதான, ஆர்த்தி ரகுராம்: ஒரு பிரச்னைக்கான தீர்வு, நல்ல தொழில், 'ஐடியா'வாக இருக்கும் என்று சொல்வர். எனக்கு இருந்த முகப்பரு மற்றும் கரும்புள்ளி பிரச்னைகளுக்கு தீர்வு காண தேடலை ஆரம்பித்தேன்.

அந்த தேடல் தான், இப்போது உலகம் முழுதும் விற்பனையாகும், எங்களின், 'பிராண்ட்' ஆக வளர்ந்து நிற்கிறது.

எம்.பி.ஏ., பட்டதாரியான நான், 2018ல், 10,000 ரூபாய் முதலீட்டில், வீட்டிலேயே சிறிய அளவில் தொழில் துவங்கினேன்.

அந்த தொழிலின் இன்றைய மதிப்பு, 350 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, கேரளாவில் திருச்சூர், கொச்சி, திருவனந்தபுரம் என ஆறுக்கும் மேற்பட்ட நகரங்களில், 20 லட்சத்திற்கும் அதிகமாக வாடிக்கையாளர்களுடன் வளர்ந்துள்ளது எங்கள் நிறுவனம்.

வீட்டிலேயே நான் தயாரித்த, கரியில் செய்யப்பட்ட சோப், என் சரும பிரச்னைக்கு தீர்வு கொடுத்தது.

தேங்காய் ஓடு, மரம் அல்லது மூங்கில் போன்ற இயற்கை மூலப்பொருட்களில் இருந்து பெறப் படும் கரித்துாளை, சோப் மற்றும் காரத்துடன் கலந்து சோப் தயாரிக்கிறேன்.

முதலில், நண்பர்கள், உறவினர்களுக்கு அந்த சோப்பை கொடுத்து பார்த்தேன்; அவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையே, தொழிலாக ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

பின், வீட்டில் வைத்து, தனி ஆளாக தொழிலை துவங்கிய நான், ஒரே ஆண்டில், ஈரோட்டில் தொழிற்சாலையை துவக்கினேன். ஆரம்பம் முதல் இப்போது வரை, அம்மா தான் என் வியாபாரத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். நான் இவ்வளவு வெற்றி பெற்றதற்கு காரணமே, அவர் தான்.

'கொரோனா' ஊரடங்கு சமயத்தில் தான், எங்கள் தயாரிப்புகள் உச்ச கட்ட வளர்ச்சியை எட்டின. தண்ணீர் கலக்காத பொருட்கள் தயாரிப்பில், ரசாயனங்களை சேர்க்க மாட்டோம்.

ஒரு பொருள் தயாரிக்க, தண்ணீர் தேவைப்படும் போது, அவை சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புகள் உண்டு என்பதால், சில ரசாயனங்களை மட்டும் அதில் பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு பொருளையும் அறிமுகம் செய்யும் முன், நிறைய பரிசோதனைகள் செய்கிறோம். இறுதியாக தர சான்றிதழ் பெற, சோதனை கூடங்களுக்கு அனுப்புவோம்.

எங்கள் நிறுவனத்தில், 120 பெண்களும், ஐந்து ஆண்களும் வேலை செய்கின்றனர், தொழிலில் நான் சந்தித்த எல்லா சவால்களுமே, எனக்கான பாடம். திறமை மற்றும் தரத்தில் நம்பிக்கை வைத்தால் தொழிலில் வெற்றியை சாத்தியப்படுத்தலாம்!

தொடர்புக்கு

91593 05599






      Dinamalar
      Follow us