/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'உனக்கென்ன தெரியும்?' என கேட்காமல் உதவி செய்கின்றனர்!
/
'உனக்கென்ன தெரியும்?' என கேட்காமல் உதவி செய்கின்றனர்!
'உனக்கென்ன தெரியும்?' என கேட்காமல் உதவி செய்கின்றனர்!
'உனக்கென்ன தெரியும்?' என கேட்காமல் உதவி செய்கின்றனர்!
PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

திரைப்பட ஷூட்டிங்கில், அன்றாட வேலைகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும், 'லைன் புரொடியூசர்' பணியில் பரபரப்பாக இருக்கும், ஆஷிஷா ஸ்ரீனிவாசன்:
சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயது முதலே சினிமா மீது ஆர்வம் அதிகம். குடும்பத்தில் எவருக்கும் சினிமா பின்னணி இல்லை. பிரிட்டனின், நாட்டிங்ஹாம் பல்கலையில், 'பிசினஸ் அண்டு எக்கனாமிக்ஸ்' படித்து, 'இம்பீரியல் காலேஜ் ஆப் லண்டனில்' மேனேஜ்மென்ட் மேற்படிப்பு முடித்து, சென்னை வந்தேன்.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் வாய்ப்பு கேட்டேன். 'வானம் கொட்டட்டும்' படத்தில், அசிஸ்டன்ட் லைன் புரொடியூசரா வேலை செய்ய வாய்ப்பு கொடுத்தார். அதை முடித்ததும், 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜூனியர் லைன் புரொடியூசரா வேலை பார்த்தேன்.
நடிகர் - நடிகையரிடம் பேசி கால்ஷீட் வாங்குவது, படத்தின் அன்றாட பணிகளை திட்டமிடுவது, நிர்வகிப்பது, படக்குழுவினரை ஒருங்கிணைத்து வேலை வாங்குவது, பட்ஜெட்டை திட்டமிடுவது என, அனைத்து வேலைகளும் லைன் புரொடியூசருடையது தான்.
வெளியில் இருந்து நான் பார்த்த சினிமா வேறு. உள்ளே வந்து வேலை செய்கிறபோது, பார்க்கும் சினிமா வேறாக இருக்கிறது. இயக்குநரில் ஆரம்பித்து அத்தனை பேரும், அதிகாலை முதல் நள்ளிரவு வரை வேலை பார்த்துக் கொண்டே இருப்பர்.
எனக்கு வாய்ப்பு கொடுத்த எவருமே, 'உனக்கென்ன தெரியும்?' என்று கேட்காமல், 'முயற்சி செய்... கற்றுக்கொள். விழுந்தால் பிடித்துக் கொள்கிறோம்' என்று கூறி, சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தனர்.
நான், 24 மணி நேரமும் நடிகர் - நடிகையர், டெக்னீஷியன்கள் கூடவே இருக்க வேண்டும். அதனால், ஒவ்வொரு படத்தில் வேலை பார்க்கும் அத்தனை பேரும், அந்த படம் முடிவதற்குள் குடும்பம் போன்றே ஆகிவிடுவர். 'அடுத்து என்ன புராஜெக்ட் செய்கிறாய்'? என்று அக்கறையாக விசாரிக்க ஆரம்பித்து, தனிப்பட்ட அனுபவங்களை கூறுவது, அறிவுரை தருவது வரைக்கும் எல்லாருடனும் எனக்கு, 'ஸ்வீட் மெமரீஸ்' நிறைய இருக்கிறது.
அப்பாவுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். டி.என்.பி.எல்.,லில் திண்டுக்கல் டிராகன்ஸ் டீமுக்கும், கர்நாடகாவில் மங்களூரு டிராகன்ஸ் டீமுக்கும் அப்பா தான் உரிமையாளர். அவரை பார்த்து, எனக்கும் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் வந்து விட்டது.
அப்பா அமெரிக்காவில் இருந்தபோது, அவருடைய கிரிக்கெட் டீம்களின் ஏலம், மார்க்கெட்டிங், ஈவென்ட்ஸ், புரமோஷன் எல்லாவற்றையும் நான் தான் பார்த்துக் கொண்டேன்.