/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பயிரை சேதமாக்கும் பறவைகளையும் இந்த கருவியால் விரட்ட முடியும்!
/
பயிரை சேதமாக்கும் பறவைகளையும் இந்த கருவியால் விரட்ட முடியும்!
பயிரை சேதமாக்கும் பறவைகளையும் இந்த கருவியால் விரட்ட முடியும்!
பயிரை சேதமாக்கும் பறவைகளையும் இந்த கருவியால் விரட்ட முடியும்!
PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

வனவிலங்குகளை விரட்ட எளிய கருவி ஒன்றை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ள, குமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த, 12 வயதான கிரிஸ்பின் ஜோடன்:
தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். கரடி, சிறுத்தை, நரி போன்ற வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் பலர் மரணம் அடைந்த செய்திகளை டிவியிலும், பேப்பரிலும் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது.
எங்க மாவட்டத்தில் இருக்கக்கூடிய மலையோர கிராமங்களில் வசிக்கிறவங்களை கரடி தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துட்டு இருக்கு.
வனவிலங்குகளை துன்புறுத்தாமல், அதுங்ககிட்ட இருந்து மனிதர்கள், தங்களை தற்காத்துக் கொள்வதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன்.
நெருப்பை பார்த்தாலோ, பட்டாசு சத்தத்தை கேட்டாலோ, வனவிலங்குகள் பயந்து ஓடி விடும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.
வனவிலங்குகள், பக்கத்தில் வந்த பின் தீப்பந்தம் கொளுத்துறதோ, பட்டாசு வெடிக்கிறதோ முடியாத காரியம்.
எதிர்பாராத விதமாக கரடி, நரி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நம் பக்கத்தில் நெருங்கி வந்து விட்டால் கூட, குறைவான கால அவகாசத்தில் இயக்கி, அதை விரட்டி அடிக்கிறதுக்கான டெக்னாலஜி கொண்ட கருவியை கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன்.
எங்கு வேண்டுமானாலும் சுலபமாக கொண்டு போற மாதிரி அந்த கருவியை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானித்தேன்.
நவீன தொழில்நுட்பம் வாயிலாக, நெருப்பு மாதிரியான ஒளியையும், பட்டாசு வெடிக்கும் சத்தத்தையும் உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.
ஓராண்டிற்கு முன் இந்தக் கருவியை உருவாக்கினேன். இதற்கு காப்புரிமையும் உள்ளது. இதை உருவாக்குவதற்கு, 6,000 ரூபாய் செலவானது.
மொத்தம் 2 அடி நீளம், 4 அங்குலம் விட்டம் கொண்ட குழாயில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பி.வி.சி., குழாயின் முன்பக்கம் நான்கு எல்.இ.டி., லைட், கிளாத் உட்பட இன்னும் உதிரி பாகங்கள் வைத்துள்ளேன்.
குழாயோட இன்னொரு முனையில், 20 வாட்ஸ் புளு டூத் ஸ்பீக்கர் அமைத்துள்ளேன். அதில் துப்பாக்கி வெடிப்பது போன்றும், பட்டாசு வெடிப்பது போலவும் சத்தம் கேட்கும். மின்சாரத்தில் சார்ஜ் போட்டு இதை எளிதாக இயக்கலாம்.
விவசாயிகள் வயலுக்கு போகும்போது, கையோடு இதை எளிதாக எடுத்துச் செல்லலாம். சிறுத்தை, நரி மாதிரியான விலங்குகள் மட்டுமில்லை. பயிர்களை அழிக்க கூடிய குரங்கு, மயில், பறவைகளை விரட்டவும் பயன்படுத்தலாம்.
என் முயற்சிக்கு பெற்றோர், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், வனத்துறையினர், மற்றும் விவசாயிகள் மத்தியில் இருந்து பாராட்டுகள் வருகின்றன.
தொடர்புக்கு:
94437 45515