/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கழிவுநீர் கால்வாயாக இருந்த ஆற்றுக்கு உயிர் கொடுத்தோம்!
/
கழிவுநீர் கால்வாயாக இருந்த ஆற்றுக்கு உயிர் கொடுத்தோம்!
கழிவுநீர் கால்வாயாக இருந்த ஆற்றுக்கு உயிர் கொடுத்தோம்!
கழிவுநீர் கால்வாயாக இருந்த ஆற்றுக்கு உயிர் கொடுத்தோம்!
PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

'டக்வீட்' எனப்படும் தாவரத்தை பயன்படுத்தி கழிவுநீரை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில், 'லெம்னியன் கிரீன் சொல்யூஷன்' நிறுவனத்தை நடத்தி வரும் பிரசன்னா ஜோக்டியோ, பூஜா டெண்டுல்கர்:
பிரசன்னா: நான் பிரிட்டன் கிழக்கு ஏஜ்லியா பல்கலையில் முதுகலை படித்தபோது, 'டக்வீட்' குறித்து தெரிந்து கொண்டேன். இது, நீர்நிலைகளில் பல்கி பெருகக்கூடிய ஒரு மிதவைத் தாவரம்.
இதன் சிறப்பு தன்மைகள் குறித்து நானும், அந்நாட்டைச் சேர்ந்த உயிரியல் துறை பேராசிரியர் கெய்த் வாட்டோரமும் இணைந்து, ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்தோம்.
இதன் முடிவில், டக்வீட் தாவரம் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு பயன்படக்கூடியது; அதிகப்படியான புரதச்சத்து கொண்டது என உறுதிசெய்து கொண்டாம்.
நீர்நிலைகளின் மேல் பரப்பில் மிதந்து வளரக்கூடிய இதன் முலம், மாசு படிந்த மற்றும் கழிவுநீர் கலந்த ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளை துாய்மைப்படுத்தலாம்.
கடந்த 2010ல், முதுகலை பயோ டெக்னாலஜி முடித்துவிட்டு, புனேவுக்கு திரும்பி ஒரு கல்லுாரியில் விரிவுரையாளராக சேர்ந்தேன்.
என் துறையில் படித்த மாணவி பூஜா டெண்டுல்கர், கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவராக இருந்தார்.
நாங்கள் இருவரும் சேர்ந்து, டக்வீட் தாவரத்தை பயன்படுத்தி நீர்நிலைகள் மற்றும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, 2018ல் இந்நிறுவனத்தை துவக்கினோம்.
பூஜா டெண்டுல்கர்: எங்கள் திட்டத்தை, சாங்க்லியில் அமைந்துள்ள கமண்ட்லு ஆற்றில் முதலில் செயல்படுத்த துவங்கினோம். அது கழிவுநீர் வாய்க்கால் போலவே மாறியிருந்தது.
அப்பகுதி எம்.எல்.ஏ., ரோகித் பாட்டீல் மற்றும் பாலிவுட் நடிகர் நானா படேகரின், 'நாம் பவுண்டேஷன்' துணையோடு, அந்த ஆற்றுக்கு உயிர் கொடுக்கும் வேலையை துவங்கி, அதில் வெற்றி பெற்றோம்.
டக்வீட் தாவரம், கழிவுநீரில் மிதந்து வேர்கள் வாயிலாக அசுத்தங்களை உட்கொள்ளும்; 48 - 98 மணி நேரத்தில் இரண்டு மடங்காக பெருகி, மிக வேகமாக நீர்நிலைகளை மூடிவிடும்.
ஆனாலும், சூரிய ஒளி நீருக்குள் செல்வதை தடுப்பதில்லை. கழிவுநீரை சுத்திகரிப்பதுடன், அதிலுள்ள மீன்களுக்கும், நுண்ணுயிர்களுக்கும் உணவாகவும் இந்த தாவரம் பயன்படும்.
தொடர்புக்கு
83292 94163
(இவர்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும்)

