/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் படித்து ஜெயித்தோம்!
/
சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் படித்து ஜெயித்தோம்!
சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் படித்து ஜெயித்தோம்!
சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் படித்து ஜெயித்தோம்!
PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

திட்டமிட்டு படித்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்களாக பணிபுரியும் ந ண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் கணேஷ்:
கணேஷ்: நானும், ஸ்ரீராமும் ஐந்தாம் வகுப்பு வரை, தனியார் பள்ளியில் ஒன்றாக படித்தோம். ஆறு முதல் பிளஸ் 2 வரை, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தோம். அங்கு தான், தேசிய மாணவர் படை எனும், என்.சி.சி., குறித்து தெரிந்து கொண்டோம்.
எட்டாம் வகுப்பில் தான் என்.சி.சி.,யில் சேர முடியும் என்பதால், எப்போது எட்டாம் வகுப்புக்கு செல்வோம் என்று காத்திருந்து, பெயர் கொடுத்தோம்.
பிளஸ் 2வில் நல்ல மார்க் வாங்கினோம். எங்களுக்கு, ராணுவத்தில் சேருவது தான் இலக்காக இருந்தது; பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதனால், என்.சி.சி., விங் சிறப்பாக செயல்படுகிற, விருதுநகர் மாவட்டம், சாத்துார், ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லு ாரியில் சேர்ந்தோம்.
கல்லுாரியில் என்.சி.சி., சீனியர்ஸ் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், அந்த கண்டிப்பு தான், எங்களை சிறப்பானவர்களாக உருவாக்கியது.
ஸ்ரீராம்: கல்லுாரி இரண்டாம் ஆண்டில், ஏர் போர்சில் எக்ஸ், ஒய் குரூப்பில் சேர்வதற்கு, தேர்வு எழுத சென்னை சென்றோம். அப்போது தான் எவ்வளவு பேர் இந்த பரீட்சைக்காக எப்படியெல்லாம் படிக்கின்றனர் என்று தெரிந்தது. ரிசல்ட் வந்தபோது, மிகவும் குறைவான மதிப்பெண் வாங்கி இருந்தோம்.
ஆனால், அது தான் இந்த தேர்வுகளை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவை எங்களுக்கு கொடுத்தது. போட்டி கடினம், உழைப்பு அதிகம் தேவை என தெரிந்து கொண்டோம்.
மேலும், துணை ராணுவ படையான, 'பாரா மிலிட்டரி போர்ஸ்' குறித்தும் தெரிந்தது. அதில், எங்களுக்கு மிகவும் பிடித்தது, எல்லை பாதுகாப்பு படையான, பி.எஸ்.எப்., தான்.
இதுதான், இந்தியாவின், 90 சதவீத எல்லைகளை பாதுகாத்து வருகிறது. அதில் சேர்வதற்கான ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் தேர்வெழுத முடி வெடுத்து, கடினமாக படித்தோம்.
சமூக வலைதளங்கள் எங்கள் கவனத்தை சிதைக்கும் என்பதால், அதை பயன்படுத்தாமலே இருந்தோம். தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதி சிறப்பான மதிப்பெண் பெற்றோம்.
அதற்கடுத்த எல்லா தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று, பி.எஸ்.எப்.,பில் கான்ஸ்டபிளாக, 2022ல் கணேஷ் மணிப்பூரிலும், நான் ராஜஸ்தானிலும் பணியில் சேர்ந்தோம்.
அடுத்து, பதவி உயர்வுக்கான தேர்வுக்கு தயாராகி வருகிறோம். இரண்டு நண்பர்கள் சேர்ந்தால் ஜாலியாக இருக்கலாம்; அவுட்டிங் போகலாம்.
கூடவே, நம்மை சிறப்பாகவும் முன்னேற் றிக் கொள்ளலாம். அதனால், ஒரே இலக்குள்ள நண்பர்கள் சேர்ந்து, அதை நோக்கி பயணிக்கும்போது தொலைவு குறையும்.