sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

 விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!

/

 விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!

 விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!

 விடாமுயற்சி இருந்தால் சாமானிய பெண்களும் சாதனையாளர் ஆகலாம்!


PUBLISHED ON : பிப் 22, 2026 02:02 AM

Google News

PUBLISHED ON : பிப் 22, 2026 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதிஷா நேச்சுரல்ஸ்' என்ற பெயரில், சுய தொழிலில் அசத்தும், கடலுார் மாவட்டம், கூடலுார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான, 33 வயது தமிழரசி:

வறுமை காரணமாக என் தந்தை, தனக்கு சாத்தியமாகாத கல்வி, தன் பிள்ளைகளுக்கு கட்டாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான், என்னை பொறியியல் பட்டதாரி ஆக்கியது.

கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்கு திருமணம் ஆனது. கணவர் போதுமான வருமானம் கிடைக்காததால், வேலை தேடி வெளிநாடு சென்றார்.

திருமணத்துக்கு பிறகும் நான் படிப்பை தொடர கணவரும், தந்தையும் பெரும் ஆதரவாக இருந்தனர். உடல்நலக் குறைவால் திடீரென என் அப்பா இறந்து விட்டதால், ஊருக்கு திரும்பினார் கணவர்.

எங்களுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தபடியே, கால்நடை தீவனம் விற்பனையை ஆரம்பித்தார் கணவர்.

நான், மாதவிடாய் கால அவதிகளால் சிரமப்பட்டேன். கடைகளில் கிடைக்கும் ரசாயன நாப்கின்களே என் பிரச்னைகளுக்கு காரணம் என்றும் இயற்கை நாப்கின்களுக்கு மாறும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

சுத் தமான பஞ்சால் தயாரிக்கப்பட்ட, இயற்கை நாப்கின்கள் மார்க்கெட்டில் கிடைப்பது தெரியவந்தது. அவற்றை பயன்படுத்த ஆரம்பித்த சில மாதங்களிலேயே என் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.

என்னை போல கஷ்டப்படுகிற மற்ற பெண்களுக்கும் அத்தகைய நாப்கின்கள் கிடைக் க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

கையில் இருந்த, 3,000 ரூபாய் முதலீட்டில், நாப்கின் முகவர் உரிமையை எடுத்து, என் வணிக பயணத்தை ஆரம்பித்தேன். கிராமப்புற பெண்களிடம் நாப்கின் குறித்து பேசுவதே சவாலாக இருந்தது.

பெண்களிடம் கருப்பை ஆரோக்கியம் மற்றும் நாப்கின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். மெல்ல அவர்களுக்கு என் மீது நம்பிக்கை வந்து, என் தயாரிப்புகளை தேடி வர ஆரம்பித்தனர்.

நாப்கின் விற்பனையில் கிடைத்த நம்பிக்கையை தொடர்ந்து, அடுத்து பாரம்பரிய உணவு பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க துவங்கினேன்.

இ தற்கு முறையான பயிற்சிகளை பெற்று, இன்று, 12 வகையான ஊட்டச்சத்து பானங்கள், சத்துமாவு வகைகள் மற்றும் டீ வகைகள் என, 40க்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்து வருகிறேன். என் தயாரிப்புகள் கே ரளா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

நாப்கி ன்கள் விற்பனை மூலம், 10 லட்சம் ரூபாய், உணவு பொருட்கள் வாயிலாக, 20 லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். செலவுகள் போக மாதம், 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

பெண்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். விடாமுயற்சியும், சரியான திட்டமிடுதலும் இருந்தால், சாமானிய பெண்களும் சாதனையாளர்கள் ஆகலாம்.

தொடர்புக்கு:

93843 07421






      Dinamalar
      Follow us