தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'தொழில் துவங்க பெரிய முதலீடுகள் தேவையில்லை!'

'தொழில் துவங்க பெரிய முதலீடுகள் தேவையில்லை!'

'தொழில் துவங்க பெரிய முதலீடுகள் தேவையில்லை!'


PUBLISHED ON : ஆக 07, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2026 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கேக்' தயாரிப்பு தொழிலில் அசத்தும், திருச்சியைச் சேர்ந்த தேவகி:

என் சொந்த ஊர் திருச்சி தான். அப்பா உணவகம் நடத்தி வந்தார். இதனால், சிறு வயதிலேயே சமையல் தொழில் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் எம்.பி.ஏ., முடித்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தேன்; கை நிறைய சம்பளம் கிடைத்தது.

ஆயினும், ஒரே வேலையை தொடர்ந்து செய்ததில், சலிப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கின்போது, துணிந்து வேலையை ராஜினாமா செய்தேன்; அதுதான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

வேலையை விட்டாலும், தெளிவான திட்டம் எதுவும் கையில் இல்லை. சில வாரங்கள், நிறைய புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன். சமூக வலைதளம் வாயிலாக, 'கேக்' தயாரிக்க கற்றுக் கொண்டேன். இது தொடர்பான பயிற்சி வகுப்புகளிலும் அடிப்படையான விஷயங்களை சொல்லிக் கொடுத்தனர். புதுப்புது வகைகளில் கேக்குகள் செய்து பார்த்தேன். ஆரம்பத்தில் நிறைய பொருட்கள் வீணாகின. ஆனாலும், பயிற்சி தான் பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தது.

என் நண்பர்கள் சிலர், அவர்களது பிறந்த நாளுக்கு கேக், 'ஆர்டர்'கள் கொடுத்தனர். நன்றாக இருப்பதாகக் கூறியதால் உற்சாகமடைந்து, கேக் தயாரிப்பதை, சமூக வலைதளங்களில் காணொளிகளாக பதிவிட ஆரம்பித்தேன். அதைப் பார்த்து, தினமும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.

வியாபாரம் மெதுவாக வளர ஆரம்பித்தது. இன்று ஒரு மாதத்திற்கு, 200 கிலோவுக்கும் அதிகமான கேக் ஆர்டர்கள் வருகின்றன. இப்போதைக்கு, சென்னை மற்றும் திருச்சி வாடிக்கையாளர்களிடம் மட்டும் ஆர்டர்கள் எடுக்கிறேன். மற்ற ஊர்களில் இருந்து யாராவது அதிக அளவில் கேக் கேட்டால், என் குழுவினருடன் சென்று செய்து கொடுக்கிறோம்.

வாடிக்கையாளர்களின் தேவைகள் வித்தியாசமாக இருக்கும். முதலில், வாடிக்கையாளரை கவர்வது கேக்கின் வடிவம் தான். அதனால், அவர்கள் கேட்கும் வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கேக் செய்து கொடுத்து விட்டால், தொடர்ந்து வாய்ப்புகள் வந்தபடியே இருக்கும்; தொழிலும் நன்கு வளரும்.

சமையலறையில் ஆரம்பித்த தொழில், இன்று 15 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை, சமூக வலைதளங்கள் தான். ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறேன். தற்போது, திருச்சியில் சிறிய உணவகமும் துவங்கியுள்ளேன்.

தொழில் துவங்க பெரிய முதலீடு மட்டும் தேவை இல்லை. திறமையும், ஒரு மொபைல் போனும் இருந்தால், சமூக வலைதளம் வாயிலாக யார் வேண்டுமானாலும் தொழில் துவங்கி, வெற்றி பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us