/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி. சாலை நடுவே பள்ளங்கள் கூவத்துார் அருகே அவதி
/
புகார் பெட்டி. சாலை நடுவே பள்ளங்கள் கூவத்துார் அருகே அவதி
புகார் பெட்டி. சாலை நடுவே பள்ளங்கள் கூவத்துார் அருகே அவதி
புகார் பெட்டி. சாலை நடுவே பள்ளங்கள் கூவத்துார் அருகே அவதி
ADDED : பிப் 27, 2025 12:14 AM

கூவத்துார் அருகே உடல்காரக்குப்பம் பகுதியில் மதுராந்தகம் - கூவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் கடந்து செல்கின்றன.
மேலும், இப்பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் 'கிரஷர்'களுக்கு அதிகப்படியான லாரிகள் வந்து செல்வதால், சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சேதமடைந்து உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளங்களை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தே.திருமுருகன், கூவத்துார்.