ADDED : ஜூலை 15, 2025 10:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர் அடுத்த பருக்கல் கிராமத்தில், கயப்பாக்கம் - அச்சிறுபாக்கம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
மதுராந்தகம், அச்சிறுபாக்கம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன.
இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை பழுதடைந்து உள்ளது.
இதனால், பயணியர் பேருந்திற்காக மழை, வெயிலில் நின்று காத்திருக்கும் நிலை உள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகள், இங்கு புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆ.தினகரன்.
சித்தாமூர்.