/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; தடுப்புச்சுவர் இல்லாத கிணறு உயிர்பலி ஏற்படும் அபாயம்

ADDED : ஜூலை 02, 2025 09:49 PM

தடுப்புச்சுவர் இல்லாத கிணறு உயிர்பலி ஏற்படும் அபாயம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சி, சித்தேரி எதிரே நாகாத்தம்மன், கன்னியம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவில்கள் அருகே உள்ள விவசாய நிலத்தில், தடுப்புச்சுவர் இல்லாமல், தரைமட்டத்தோடு கிணறு உள்ளது.
தற்போதும் கிணற்றில் 20 அடி ஆழத்தில் நீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள், பலமுறை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள், கிணற்றில் தவறி விழவும் வாய்ப்புள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அல்லது கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வளையால் மூட, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.