/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி பேருந்து நிழற்குடை வேண்டும்
/
புகார் பெட்டி பேருந்து நிழற்குடை வேண்டும்
ADDED : ஏப் 21, 2025 11:56 PM

பேருந்து நிழற்குடை வேண்டும்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை இல்லை.
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் சென்னை மாநகர பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே செல்வதில்லை. ஆகவே, இந்த நிறுத்தத்தில் பயணியரை இறக்கி விடுகின்றன.
தவிர, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியே வரும் பயணியர், தாம்பரம் நோக்கி செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
எனவே, கிளாம்பாக்கம் முனையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை அமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே. அர்ச்சனா தேவி,
பெருங்களத்துார்.