/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் தஞ்சமடையும் மாடுகளால் பீதி

ADDED : ஜன 13, 2025 11:35 PM
மண்ணிவாக்கம் கூட்டு சாலையில்
தஞ்சமடையும் மாடுகளால் பீதி
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி, மண்ணிவாக்கம் கூட்டு சாலையில், அதிக அளவில் மாடுகள் திரிகின்றன. மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் சிக்னல், போக்குவரத்து போலீசார் இல்லாததால், அடிக்கடி வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன.
இந்த அபாயகரமான இடத்தில் மாடுகள் அதிக அளவில் தஞ்சமடைவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சாலையில் தஞ்சமடைந்துள்ள மாடுகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்கவும், மாட்டின் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரபு, மண்ணிவாக்கம்.