ADDED : பிப் 05, 2026 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியில் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இங்கு வழக்கறிஞர், பொதுமக்கள், போலீஸ் என தினமும் பல்வேறு தரப்பினர் வந்து செல்கின்றனர்.
நீதிமன்றம் எதிரே வணிக கடைகள், வழக்கறிஞர்கள் அலுவலகங்கள் உள்ளன. இந்த ஓ.எம்.ஆர்., சாலை வழியாக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன.
சமீபத்தில் கூட பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்குள்ள சாலையின் இருபுறமும் வேகத்தடுப்பு அமைக்க வேண்டும்.
- ஏ.வி.ஆனந்த், திருப்போரூர்.

