/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை மையத்தடுப்பில் எச்சரிக்கை பலகை தேவை

ADDED : ஆக 07, 2025 01:37 AM

சாலை மையத்தடுப்பில் எச்சரிக்கை பலகை தேவை
சூணாம்பேடு, ஆரவல்லி நகர் பகுதியில், மதுராந்தகம் மற்றும் தொழுப்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளின் சந்திப்பு உள்ளது.
இந்த சாலை சந்திப்பு வழியாக தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, சாலை நடுவே நெடுஞ்சாலைத் துறை சார்பில் மையத்தடுப்பு அமைக்கப்பட்டது.
ஆனால், அதில் ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்காததால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் மையத்தடுப்பில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே மையத்தடுப்பில் ஒளிரும் எச்சரிக்கை பலகை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.சிந்தன், வில்லிப்பாக்கம்.