/
புகார் பெட்டி
/
சென்னை
/
-புகார் பெட்டி சாலை மோசம்: சீரமைக்க வலியுறுத்தல்
/
-புகார் பெட்டி சாலை மோசம்: சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் - -பல்லாவரம் நெடுஞ்சாலை, பல்லாவரம் ஜி.எஸ்டி., சாலையில் இருந்து, குன்றத்துார் வழியாக பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய சாலையாக உள்ளது.
இந்த வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், குன்றத்துார் அருகே மணஞ்சேரியில் பல இடங்களில் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால், அந்த வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். குன்றத்துார் அருகே சேதமான சாலையை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சீரமைக்க வேண்டும்.
- சந்துரு, குன்றத்துார்.