/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி : பறிமுதல் வாகனங்கள் ஏலத்தில் விட எதிர்பார்ப்பு
/
புகார் பெட்டி : பறிமுதல் வாகனங்கள் ஏலத்தில் விட எதிர்பார்ப்பு
புகார் பெட்டி : பறிமுதல் வாகனங்கள் ஏலத்தில் விட எதிர்பார்ப்பு
புகார் பெட்டி : பறிமுதல் வாகனங்கள் ஏலத்தில் விட எதிர்பார்ப்பு
ADDED : ஜன 16, 2025 12:39 AM

ஆவடி போலீஸ் கமிஷனரகம், அம்பத்துார் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட, கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் சிக்கியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவை சிதலமடைந்து வருகிறது.
குறிப்பாக பைக்குகளில் உள்ள உதிரி பாகங்கள் மாயமாகி வருகின்றன. மேலும் மழையின் போது பைக்குகள் முழுதும் மூழ்கும் அளவு மழைநீர் தேங்கி வீணாகி வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட பைக்குகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை கேட்பாரற்று நிலையில் உள்ளன.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடத்தப்படும் ஏலத்தின் போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும்.
- சுகுமார், கொரட்டூர்.