/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி கோவில் குளம் சீரமைக்க வேண்டுகோள்
/
புகார் பெட்டி கோவில் குளம் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 02, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-
பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலுக்கு சொந்தமாக பெருமாள் நீராடிய குளமும், ஆண்டாள் நீராடிய குளமும் உள்ளது.
இதில், ஆண்டாள் நீராடிய குளம், பராமரிப்பின்றி உள்ளது. குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. குப்பை கழிவு குளத்தில் வீசப்படுகிறது. குளம் முழுதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த குளத்தை சீரமைக்க வேண்டும்.
- ரங்கராஜன்
பூந்தமல்லி