/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி : கோவில் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா தேவை
/
புகார் பெட்டி : கோவில் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா தேவை
புகார் பெட்டி : கோவில் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா தேவை
புகார் பெட்டி : கோவில் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா தேவை
ADDED : ஜன 28, 2025 01:04 AM
-திருவொற்றியூரில், வடக்கு மற்றும் தெற்கு பக்கம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிழக்கே, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கே, தெற்கு மாடவீதி, மாட்டுமந்தை மேம்பாலம், தண்டையார்பேட்டை, மணலி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், எல்லையம்மன் கோவில் சந்திப்பு உள்ளது.
இந்த சந்திப்பை, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் நிலையில், மிகவும் குறுகலாக இருப்பதால், மாநகர பேருந்து, கனரக வாகனங்கள் திரும்புவதில் சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக, மணலியில் இருந்து, மாட்டுமந்தை மேம்பாலம் வழியாக, தெற்கு மாடவீதியில் இருந்து, எல்லையம்மன் கோவில் சந்திப்பில் திருப்ப முயற்சிக்கும்போது நெரிசல் அதிகரிக்கிறது.
எல்லையம்மன் கோவில் சந்திப்பை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைக்க வேண்டும்.
- கே.சூர்யா, திருவொற்றியூர்