/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜன 28, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சி அலுவலகம் அருகே, பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க, 2016ல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது.
சுத்திகரித்த நீரை, அப்பகுதிவாசிகள் இலவசமாக பிடித்துச் சென்று பயனடைந்தனர். இந்த மையத்தின் இயந்திரம், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து உள்ளது. இதனால் தனியாரிடம் கட்டணம் செலுத்தி, கேன் குடிநீரை வாங்கும் நிலை உள்ளது. சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரவேண்டும்.
-ரங்கராஜ், பூந்தமல்லி