/
புகார் பெட்டி
/
சென்னை
/
அண்ணனுார் சாலையில் வேகத்தடை வேண்டும்
/
அண்ணனுார் சாலையில் வேகத்தடை வேண்டும்
ADDED : ஜூன் 26, 2025 11:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி அடுத்த அண்ணனுார் 60 அடி சாலை, ஒன்றரை கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையையொட்டி, சிவசக்தி நகர், ஜே.பி.நகர் உட்பட 13க்கும் மேற்பட்ட தெருக்களில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அய்யப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்துார் அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோரும், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையில் வேகத்தடை இல்லாததால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள், அண்ணனுார் 60 அடி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- சுப்பிரமணியம், அண்ணனுார்.