/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி பள்ளி சாலையில் காய்ந்து விழும் மரக்கிளைகளால் மாணவர்கள் பீதி

ADDED : ஜன 28, 2025 12:31 AM

அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலத்தில், பள்ளிச் சாலை உள்ளது.
திருமங்கலம் காவல் நிலையம் அருகிலேயே உள்ள இந்த சாலையின் அருகில், இரண்டு தனியார் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் பள்ளி, தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
இந்த சாலை முழுதும், ஏராளமான மரங்கள் காய்ந்து கிடக்கின்றன. திடீரென முறிந்து விழுவதால், மாணவர்கள் அடிக்கடி காயமடைகின்றனர். சிலர், அவ்வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து, அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் பயனில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளி சாலையோரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் காய்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
- -கோதை ஜெயராமன், அண்ணா நகர்