/
புகார் பெட்டி
/
சென்னை
/
வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படுமா?
/
வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படுமா?
ADDED : ஜூலை 10, 2025 11:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார் மண்டலம், முகலிவாக்கம், மதனந்தபுரம், ஹிமாச்சல் நகரில், மின் கம்பிகள் மீது உரசிய மரக்கிளைகளை மின்வாரியத்தினர் அகற்றினர். அவை, சாலையோரம் கிடத்தப்பட்டன.
இப்பணிகள், கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்தன. இதையடுத்து, வெட்டிய கிளைகளை அகற்றக்கோரி, சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் அளித்தும், இன்று வரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது, அந்த கிளைகள் காய்ந்து சருகாகியுள்ளன. அவற்றில் விஷ ஜந்துக்கள் ஐக்கியமாகி வருகின்றன. எனவே, விபரீதம் நிகழும் முன், மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
- ஹிமாச்சல் நகர் மக்கள்.