/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
குடிகாரர்கள் படுத்து ஓய்வெடுக்க ஒரு பஸ் நிறுத்தம்! கோவை அரசு மருத்துவமனை அருகே 'சிறப்பு ஏற்பாடு'
/
குடிகாரர்கள் படுத்து ஓய்வெடுக்க ஒரு பஸ் நிறுத்தம்! கோவை அரசு மருத்துவமனை அருகே 'சிறப்பு ஏற்பாடு'
குடிகாரர்கள் படுத்து ஓய்வெடுக்க ஒரு பஸ் நிறுத்தம்! கோவை அரசு மருத்துவமனை அருகே 'சிறப்பு ஏற்பாடு'
குடிகாரர்கள் படுத்து ஓய்வெடுக்க ஒரு பஸ் நிறுத்தம்! கோவை அரசு மருத்துவமனை அருகே 'சிறப்பு ஏற்பாடு'
ADDED : ஏப் 29, 2025 06:21 AM

அனைத்து விளக்கும் 'அவுட்'
கோவை மாநகராட்சி, 49வது வார்டு, பொங்காளியூர், பாலு கார்டன் பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் 60 அடி ரோட்டில், அனைத்து தெருவிளக்குகளும் எரியவில்லை. நடந்து செல்பவர்களும், வாகனஓட்டிகளும் அவ்வழியே செல்லவே அஞ்சுகின்றனர். கடும்இருள் காரணமாக தினமும் விபத்து நடக்கிறது.
- கோமதிநாயகம், பொங்காளியூர்.
தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்
இடையர்பாளையம், 93வது வார்டு, பெருமாள் கோனார் வீதியில், முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இரண்டு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வராததால், குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- ஜெயஸ்ரீ, இடையர்பாளையம்.
மைதானத்தை சீரமைக்கணும்
பேரூர், போஸ்டல் காலனியில் உள்ள மைதானம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. மைதானம் முழுவதும் கற்கள், குப்பையாக உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில், சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை, மைதானத்திலேயே வீசிச்செல்கின்றனர். வேலி அமைத்து, நடைப்பயிற்சி செய்ய ஏதுவாக, நடைபாதை அமைத்து தர வேண்டும்.
- தங்கவேல், பேரூர்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
பீளமேடு, நேருநகர், 26வது வார்டு, பொதுக்கழிப்பிடத்தில் விளக்கு வசதியில்லை. இரவு நேரங்களில், முதியவர்கள், பெண்கள் கழிப்பிடத்திற்கு செல்லவே அஞ்சுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பொதுக்கழிப்பிடத்தில் விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
- செல்வராஜ்,
பீளமேடு.
அகற்றப்படாத கம்பங்கள்
கோவை மாநகராட்சி, 63வது வார்டில், அரசியில் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் முறையாக அகற்றப்படவில்லை. முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறைய கம்பங்கள் உள்ளன. கட்சி பேதமின்றி கம்பங்களை அகற்ற நடவடிக்கை வேண்டும்.
- தியாகராஜன், 63வது வார்டு.
மயானத்தை மறைக்கும் புதர்
பீளமேடுபுதுார் மயானம், போதிய பராமரிப்பின்றி புதர்மண்டி உள்ளது. மயானத்திலுள்ள மர இலை குப்பை, புதரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மயானம் அருகேவுள்ள, தெருவிளக்கும் பல நாட்களாக எரியாமல் உள்ளது. தெருவிளக்கு பழுதையும் விரைந்து சரி செய்ய வேண்டும்.
- யுவராஜ், திருமகள் நகர்.
கடும் துர்நாற்றம்
நவாவூர் பிரிவு, பாரதியார் பல்கலை போஸ்ட், அபிராமி நகரில், சில வீடுகளிலிருந்து திறந்தவெளியில் சாலையில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. உரிமையாளர்களிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை.
- பிரசாந்த், நவாவூர் பிரிவு.
சேதமடைந்த ரோடு
ரத்தினபுரி, பெரியசாமி லே-அவுட், முதல் மற்றும் இரண்டாம் வீதிகளில், சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையெங்கும் பெரிய, பெரிய பள்ளங்களாக காணப்படுகின்றன. பல இடங்களில் தார் முழுவதும் பெயர்ந்து, மண் சாலையாக உள்ளது. அதிக விபத்துகள் நடப்பதால், விரைந்து சாலையை சீரமைத்துத் தர வேண்டும்.
- கார்த்தி, ரத்தினபுரி.
பயணிகள் நிற்க முடியவில்லை
திருச்சி ரோடு, அரசு மருத்துவமனை அருகே உள்ள, பேருந்து நிறுத்தம் மற்றும் அருகே உள்ள இடம் சுகாதாரமற்று உள்ளது. மதுகுடித்த சிலர் இருக்கைகளில் உறங்குகின்றனர். எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது என அசுத்தம் செய்கின்றனர். பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்க முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- பெருமாள், காந்திபுரம்.
தொற்றுநோய் அபாயம்
சிங்காநல்லுார் பேருந்து நிறுத்தம் அருகே, 58வது வார்டு, கமலா குட்டை வீதியில், பிளாஸ்டிக் குப்பை, பாட்டில்கள் நிறைந்து காணப்படுகின்றன. 100 அடிக்கு மேல் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. கவுன்சிலரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- சங்கர், சிங்காநல்லுார்.