sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கோயம்புத்தூர்

/

மதுக்கூடம் ஆக மாறிப்போனது சமுதாயக்கூடம்; தொண்டாமுத்துாரில் குடிகாரர்கள் ஏடாகூடம்

/

மதுக்கூடம் ஆக மாறிப்போனது சமுதாயக்கூடம்; தொண்டாமுத்துாரில் குடிகாரர்கள் ஏடாகூடம்

மதுக்கூடம் ஆக மாறிப்போனது சமுதாயக்கூடம்; தொண்டாமுத்துாரில் குடிகாரர்கள் ஏடாகூடம்

மதுக்கூடம் ஆக மாறிப்போனது சமுதாயக்கூடம்; தொண்டாமுத்துாரில் குடிகாரர்கள் ஏடாகூடம்


ADDED : ஆக 18, 2025 10:15 PM

Google News

ADDED : ஆக 18, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுக்கூடமான சமுதாயகூடம் தொண்டாமுத்துார், தென்னமநல்லுார், புத்துார் புது காலனி கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துகின்றனர். கூடத்தை சுற்றிலும் காலி மது பாட்டில், தண்ணீர் பாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது. இதைத்தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தாரிகை, தென்னமநல்லுார்.

சீரமைக்காத குழிகள் கணபதிபுதுார், மூன்றாவது வீதியில், சாக்கடை இணைப்புகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், குழிகளை சீரமைக்கவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழேவிழுகின்றனர்.

- இனியன், கணபதிபுதுார்.

பேருந்துகளை அதிகரிக்கணும் சேரன்மாநகருக்கு குறைந்தளவிலேயே, அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மினி மற்றும் தனியார் பேருந்துகளும் வருவதில்லை. போதிய பேருந்து வசதியில்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். ஆட்டோ, கால்டாக்சியைத்தான் அதிகம் நம்பியிருக்க வேண்டி உள்ளது.

- லட்சுமி நரசிம்மன், சேரன்மாநகர்.

நோய்த்தொற்று அபாயம் பன்னீர்மடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் வழியில், சாலையோரம் கோழி கழிவுகளை இரவு நேரங்களில் வந்து கொட்டுகின்றனர். அருகில், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. கடும் துர்நாற்றம் வீசுவதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

- கார்த்திகேயன்,பன்னீர்மடை.

வீணாகும் குடிநீர் சிறுவாணி ரோடு, சக்தி நகரில் சாலை நடுவே குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் வருவதால் சாலையில் குழியும் ஏற்பட்டுள்ளது. புகார் கொடுத்தும் இதுவரை குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை.

- அசோக்குமார், சக்தி நகர்.

பேருந்து பின்னால் ஓடுகிறோம் பொள்ளாச்சி ரோடு, ஆத்துப்பாலத்தில் பேருந்து நிறுத்தம் எங்கு என்றே தெரியவில்லை. இருக்கைகளும், நிழற்குடையும் இல்லாததால், ஓட்டுனர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் பேருந்தை நிறுத்துகின்றனர். பேருந்துகளுக்கு பின்னால் பயணிகள் ஓடும் நிலை உள்ளது.

- பாலன், போத்தனுார்.

நிரம்பி வழியும் சாக்கடை சவுரிபாளையம், காவேட்டி லே-அவுட், மூன்றாவது வீதியில், சாக்கடை கால்வாயை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வதில்லை. குப்பை மற்றும் மண்ணால், அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.

- வடிவேலு, சவுரிபாளையம்.

மோசமான மின்மாற்றி மகாலிங்கபுரம், 15வது வார்டு, நுாலகம் அருகே இருக்கும் மின்மாற்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. பல இடங்களில் கம்பம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.

- சுவாமி,

மகாலிங்கபுரம்.

மிரட்டும் நாய்கள் குறிச்சி, 98வது வார்டு, சிவசக்தி காலனி, சப்தகிரி வெங்கடேஸ்வரா கோவில் செல்லும் வழியில், சாலையில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரையும், பைக்கில் செல்வோரையும் துரத்தி அச்சுறுத்துகின்றன.

- முகமத், குறிச்சி.

சறுக்கும் வாகனங்கள் வீரகேரளம் முதல் முத்தண்ணன் குளம், தொண்டாமுத்துார் ரோடு முழுவதும் சாலையின் ஒருபக்கம் சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. பாதி ரோடு மண் குழியாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர்.

- உண்ணிகிருஷ்ணன், வீரகேரளம்.

சாலையை சீரமைக்கணும் சுக்கிரவார்பேட்டை, பட்டு பூச்சி மூன்றாவது லேன், நகர்ப்புற சுகாதார நிலையம் அருகே சாலையோரம் பழைய கழிவு பொருட்கள் போடப்பட்டுள்ளன. வருடக்கணக்கில் தேங்கியுள்ள கழிவு அகற்ற வேண்டும். பல வருடங்களாக சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

- பாலா, ஆர்.எஸ்.புரம்.






      Dinamalar
      Follow us