/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
பிரதான குழாயில் உடைப்பு; ரோட்டில் வீணாகும் குடிநீர்
/
பிரதான குழாயில் உடைப்பு; ரோட்டில் வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு; ரோட்டில் வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு; ரோட்டில் வீணாகும் குடிநீர்
ADDED : செப் 08, 2025 10:00 PM

உருக்குலைந்த ரோடு கொண்டம்பட்டியில் இருந்து கோதவாடி செல்லும் ரோட்டில், பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி செல்லும் சூழல் உள்ளது. இதில், அவ்வப்போது தண்ணீர் தேங்கி இருப்பதால், வாகனங்கள் செல்லும் போது ரோட்டின் ஓரத்தில் நடந்து செல்பவர்கள் மீது தெறிக்கிறது. எனவே, ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-- கோபால், கிணத்துக்கடவு.
போக்குவரத்து நெரிசல் பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானா ரோட்டில் வார இறுதி நாட்களில் அதிகளவு வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவசர தேவைக்கு வேகமாக பயணிக்க முடியாத சூழல் உள்ளது. இதை போலீசார் கவனித்து சரி செய்ய வேண்டும்.
- பிரசாத், பொள்ளாச்சி.
குறுக்கு பட்டையால் விபத்து பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில் போடப்பட்டிருக்கும் குறுக்கு பட்டைகளால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால், பல வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குறுக்கு பட்டைகளை வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி அகற்றம் செய்து, இதற்கு பதிலாக வேகத்தடை அமைக்க வேண்டும்.
-- செந்தில், பொள்ளாச்சி.
தகவல் மையம் வருமா? வால்பாறையில் நாளுக்குநாள் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணியருக்காக தகவல் மையம் இல்லாததால் சிரமப்படுகின்றனர். எனவே, விரைவில் இங்கு சுற்றுலா தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- நவீன், வால்பாறை.
ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சிறுவர் பூங்கா பின் பகுதியில் ரோட்டோரம் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- திரவுபதி, பொள்ளாச்சி.
பராமரிப்பில்லாத ரோடு உடுமலை, மலையாண்டிபட்டினத்திலிருந்து உரல்பட்டி செல்லும் ரோடு பராமரிப்பு இல்லாமல், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பரிதாப நிலையில் உள்ளது. ரோட்டை புதுப்பித்து விபத்துகளை தவிர்க்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேசமூர்த்தி, உடுமலை.
நிழற்கூரையை மாற்றியமைக்கணும் உடுமலை, போடிபட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து தள்ளி நிழற்கூரை கட்டியுள்ளனர். இதனால், பயணியர் நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல் ரோட்டோரத்தில் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாப் அருகில், நிழற்கூரையை மாற்றியமைக்க வேண்டும்.
-சின்னசாமி, போடிபட்டி.
ஒளிராத தெருவிளக்குகள் உடுமலை, பழனியம்மாள் லே-அவுட்டில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். அப்பகுதியில் திருட்டு பயமும் அதிகரித்துள்ளது.
-குணசேகர், உடுமலை.
அடையாளம் தேவை உடுமலை, ராமசாமி நகரிலிருந்து அரசு கலைக்கல்லுாரி செல்லும் ரோட்டின் வளைவில் வேகத்தடை அடையாளம் இல்லாமல் இருப்பதால், இரவில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். வேகத்தடைக்கு வெள்ளை, மஞ்சள் நிற வர்ணம் பூச வேண்டும்.
-கருணாகரன், உடுமலை.
சமுதாய நலக்கூடம் மோசம் முக்கோணம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில், 'குடி'மகன்கள் பயன்படுத்துவதோடு, பாட்டில்களை வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியின் துாய்மை பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
-கிருஷ்ணவேணி, முக்கோணம்.
போக்குவரத்து நெரிசல் உடுமலை, ராமசாமி நகர் ரயில்வே கேட்டிலிருந்து செல்லும் ரோட்டோரத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கார், வேன் போன்ற வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் குறுகிய ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
-சுதாகர், உடுமலை.
ரோட்டில் வீணாகும் குடிநீர் உடுமலை-பழநி ரோட்டில், மைவாடி பிரிவு அருகே, கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-ஈஸ்வரன், உடுமலை.